இந்திய உணவுகளே சிறந்தவை

18kxdhep82lv0jpg

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரம், பண்புகள், தட்பவெப்பநிலைகள் உள்ளன. இதனால் அந்தந்த நாடும் தமது வானிலைக்கேற்பவும் பண்பாட்டுக்கு ஏற்றவாறும் உணவினை அமைத்துக்கொள்கின்றனர்.

ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ காட்டுப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர்,  இறைச்சினை நேரடியாக சுட்டு சாப்பிடுகின்றனர்.  அதைப்பார்த்த மேற்கத்திய நாடுகள், தாமும் அவ்வாறு சாப்பிடுகின்றோம் என்று மாமிசத்தை தந்தூரி என்ற பெயரில் சாப்பிடுகின்றார்கள்.

இந்த வகையில் நம் நாட்டிலும் நிறைய உணவுகள் படையெடுப்புகள், வாணிபம் மற்றும் பயணங்கள் மூலம் மேற்கத்திய உணவுகள் பரவிவிட்டது.  இந்த மேற்கத்திய உணவுகள் அனைத்தும் குளிர் பிரதேசங்களில் உள்ள மனிதர்கள் சாப்பிடக் கூடியது. மேலும் அவர்கள் உடலை அலட்டிக்கொண்டு அதிகமாக வேலை செய்வதில்லை. எனவே, உடலுழைப்பும், செலவிடும் கலோரியும் அவர்களுக்கு குறைவாகவே இருக்கும்.

இதனால் இவர்கள் கோதுமையில் உருவான அனைத்துப் பதார்த்தங்களையும், சாப்பிடுவார்கள். இந்த உணவுகள் இவர்களை கட்டுக்கோப்பாகவும் கதகதப்பாகவும் வைத்துக்கொள்ள உதவும். ஆனால் நம் நாடு ஒரு வெப்ப மண்டல நாடு.  இங்கு வாழும் மனிதர்கள் உடல் உழைப்பு மிக அதிகம்.  இந்த உடலுழைப்புக்கு ஏற்றவாறு நிறைய சத்துள்ள உணவுகள் வேண்டும்.

இதனால் தான் நாம் சத்துள்ள உணவுகளான கம்பு, கேழ்வரகு மற்றும் நெல் போன்ற தானியங்களை தேர்ந்தெடுத்துள்ளோம்.  இந்த உணவுகள் பண்டைய காலத்தவர்கள் முதல் இன்றுவரை பின்பற்றப்படுகின்றது.  மேலும் சைவ உணவுகளில் அதிக சத்துக்கள் உள்ளன. பருப்புகள், தானியங்கள், பழங்கள், காய்கறிகள் என்று எல்லாம் சத்துள்ளவைதான்.

அசைவ உணவுகளில் மீன், ஆட்டிறைச்சி புரதம் மிக்கது. கடல் உணவுகள் அனைத்தும் நமக்கு நன்மை தருபவை.  தினமும் ஒரே ஒரு முட்டை அதிகப்பட்சமாக உண்ணலாம். இது புரதச்சத்தை முழுவதுமாக தரும்.

இதையெல்லாம் விட்டுவிட்டு காய்ந்த ரொட்டியில் செய்த பீட்சா, மைதாவில் தயாரித்த உணவுகள், கேக் எல்லாம் நம் உடலுக்கு தீங்கு தருபவை தான்.

Leave a Reply

Your email address will not be published.