திருடப்போன வீட்டில் பேஸ்புக்! மாட்டிக்கொண்ட திருடன்!

Facebook Theief

அமெரிக்காவில் உள்ள மின்சோட்டாவில் திருடன் ஒருவன், தான் செய்த முட்டாள் தனத்தால், தன்னைத் தானே காட்டிக் கொடுத்துள்ளான். இவன் இரவு ஒரு வீட்டிற்கு திருடுவதற்காக சென்றிருக்கின்றான். அங்கே சென்றவுடன் அந்த வீட்டில் உள்ள பொருட்களை திருடிக்கொண்டு, கணினியை பார்த்துள்ளான், இன்டர்நெட் இணைப்புடன் கணினி இருப்பதையும் பார்த்துள்ளான்.

அவசரக்குடுக்கையான திருடன், அந்தக் கணினியை ஆன் செய்து தனது Facebook பக்கத்தில் Logon செய்திருக்கின்றான். வரும் அவசரத்தில் Facebook-க்கினை Logout செய்யாமல் வந்துவிட்டான். வீட்டின் உரிமையாளர், காலையில் வீட்டுப்பொருட்கள் காணாமற் போனதை பார்த்தவுடன் போலிஸூக்கு தெரிவித்துள்ளார்.

எதிர்பாராத விதமாக கணினியை ஆன் செய்கையில் இந்த திருடனின் Facebook கணக்கு Open ஆக இருந்திருக்கின்றது.  இதை வைத்து அந்த திருடனை தேட முயற்சித்துள்ளனர். அந்த திருடனின் பெயர் நிகோலஸ் என்றும் அவன் அதே தெருவினைச் சேர்ந்தவன் என்றும் அவனது Facebook Profile வழியாக கிடைத்துள்ளது.  மேலும் அவனது புகைப்படங்களும் கிடைத்துள்ளது. பிறகு என்ன? மாமியார் வீடுதான்!

திருடப்போன வீட்டில் திண்ணையில் தூங்கிய கதை என்பார்களே அது இதுதானா? குற்றம் நிருபிக்கப்பட்டால் அவனுக்கு குறைந்தது 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என போலீஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.