உருவத்தை மாற்றிவிடும் கொடுமையான நோய்கள்

eye diseas

HIV எய்ட்ஸ் மற்றும் தொழுநோய்களை கொடூரமான நோய்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றோம் அதையும் தாண்டி சில நோய்கள் உள்ளன அவை மிகவும் கொடூரமான வகையில் மனித உருவத்தினை அருவருக்கத்தக்க வகையில் மாற்றி விடுகின்றன.

உலகத்தில் ஆச்சரியங்களுக்கும், அபூர்வங்களுக்கும் அளவே இல்லை.  பிறந்தது முதல் மரணம் அடையும் வரைக்கும் எல்லாவற்றிலும் சில ஆபூர்வங்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.  மனிதர்கள் பெரும்பாலும் இறைவனிடம் வேண்டுவது,   ”நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம்.”.  எவ்வளவுதான் பணம் இருந்தாலும் குணமாக்க முடியாத நோய்கள் என்று பல இருக்கின்றன.  ஆனால் பால்வினை நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. நோய்களை விட , கண்டாலே அருவருக்கத்தக்க வகையில் உருவத்தை கோரமாக மாற்றி விடுகின்ற சில பயங்கரமான நோய்களும் இந்த உலகில் இருக்கின்றன.  அப்பப்பா, இதற்கு செத்து விடலாம் என்று எண்ண வைக்கும்.  எதிரிக்குக் கூட இந்த நோய் வந்து விட கூடாது என்று நினைக்க வைக்கும்.  உலகின் சில நாடுகளில் வழங்கப்படும் விசித்திரமான இராணுவப் பயிற்சிகள்.  அப்பேர்பட்ட சில பயங்கரமான வினோதமான நோய்கள் பற்றி இனி காண்போம்.

அருவருக்கத்தக்க சில அரிய வகை நோய்கள்.

tree man

  1. மரமனிதன் – Tree Man / Epidemodysplasia Verruciformis

மிகவும் அரிய நோய் வகை சார்ந்தது தான் இந்த மர மனிதன் நோய்.  ” Human Papillomavirus “ HPV எனும் தொற்றின் மூலம் பரவக் கூடியது இந்த நோய்.  இந்த நோய் கழுத்து. முகம். கால், கைகள், தோள் போன்ற உடல் பாகங்கள் எல்லாம் மரம் போல உருமாற ஆரம்பித்து விடும்.

onai manithan

  1. ஓநாய் நோய்.-Werewolf Syndrome

,இந்த நோயின் தாக்கத்தினால் உடலெங்கும் அதிகமான முடி வளரும்.  இதில் இரண்டு வகைகள் உண்டு.  ஆவை, General Hypertrichisis மற்றும் Localised Hypertrichisis.

Neurofibromatosis

  1. நியூரோபைப்ரோமடோசிஸ் – Neurofibromatosis

இந்த நோய்க்கு பல அறிகுறிகள் இருப்பினும் கட,   சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை வைத்து கண்டுபிடித்து விடலாம்..  இந்த நோய் தாக்கத்தினால் உடலெங்கும் அதிகமான கட்டிகள் வளரும் என்று கூறப்படுகிறது.

kateri

  1. காட்டேரி நோய் -Prophyria/Vampire Disease

ஹெமி எனப்படும் ஓர் சிவப்பு நிறமியின் அதிக உற்பத்தியால் அசாதாரணமாக ஏற்படும் நோய் தான் இந்த Prophyria.  இது ஹீமோகுளோபினில் ஏற்படும் மாற்றத்தினால் ஏற்படுகிறது. இந்த நோய் சூரிய ஒளியில் வெளியே செல்ல முடியாத அளவு சரும பாதிப்புகள் தரவல்லது.

Progeria (HGPS)

  1. முதிராமுதுமை – Progeria (HGPS)

பா (Paa)  படத்தில் அமிதாப்பச்சனின் கதாப்பாத்திரத்திற்கு ஏற்படும் நோய் தான் இது.  மிக வேகமாக முதிர்ச்சி அதிகரிக்கும் நோய்.

Lion Face Syndrome

  1. சிங்க முக நோய் – Lion Face Syndrome

மிகவும் அரிதான இ்ந்த நோயின் தாக்கம் ஏற்பட்டால் முகத்தின் எலும்புகள் பெரிதாகி விடும்.  ஏறக்குறைய சிங்கத்தின் முகம் அளவு பெரிதாக ஆகும் என்பதால் இந்த நோய்க்கு இந்த பெயா் வந்தது..  கண் மற்றும் மூக்கு பகுதிகள் கூட மூடியது போன்று தான் காட்சியளிக்கும்..

Leave a Reply

Your email address will not be published.