ஓபாமாவின் செல்ல நாயை கடத்த திட்டம்….!

dogs9n-2-web

அமெரிக்க அதிபர் ஒபாமா, நாட்டுக்கு தான் அதிபர் ஆனால் மாளிகையில் அவர் எப்போதும் தனது இரு மகள்களுக்கு அப்பாவாகவும், செல்லப்பிராணிகளுக்கு அன்பான பராமளிப்பவராகவும் தான் இருப்பார்.  அவரிடம் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இரண்டு நாய்கள் வளர்கின்றது. அதிபரின் செல்லப்பிராணிகள் என்பதால் அவை நல்ல ஊட்டத்துடன் வளர்ந்து வருகின்றது.

இந்த நாய்களுக்கு ”போ” மற்றும் ”சன்னி” என்று செல்லப்பெயர்கள் வைத்துள்ளார்.  ஓய்வு நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தனது மகள்களும் தானும் சேர்ந்து நாய்களுடன் பொழுதைக்கழிப்பார்கள்.

ஓபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, தனது செல்ல நாய்களை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்றுள்ளார். இதை ஒரு வாலிபர் தொலைவில் இருந்து கவனித்து வந்துள்ளார். அவரின் கார் மற்றும் ஆள் தோற்றத்தை கண்டு சந்தேகப்பட்ட காவலர்கள், அவரைப்பிடித்து விசாரித்ததில் அவர் கையில் ஒரு துப்பாக்கி வைத்திருந்தார்.

மேலும் அவர் பெயர் ஸ்காட் ஸ்காட்ரெட் என்றும் தான் முன்னாள் அதிபர் கென்னடியின் மகன் என்றும் கூறியிருக்கின்றார். மேலும் அவர் கூறுகையில் ஒபாமாவின் நாயைக் கடத்த திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.  ஆனால் அவர் கூறிய குடும்ப வரலாறும் கையில் உள்ள துப்பாக்கியும் அவர் சொன்ன காரணங்களை புரிந்து கொள்ள தடுத்தது.

தவறான நோக்குடன் தான் அங்கே வந்துள்ளார் என்றும் நாயைக் கடத்துவது அவரது நோக்கம் அல்ல என்றும் சந்தேகம் அடைந்த காவலர்கள் அவரை கைது செய்தனர். ஏனெனில் அவரது தாயார் மர்லின் மன்ரோ ஒரு நடிகை, இவரிடம் இல்லாத நாய்களா ஒபாமாவிடம் இருக்கப்போகின்றது.

நேற்றைய தினம்தான் அமெரிக்காவில் அதிபர் ஒபாமா நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகிவிட்டது என்று கண்ணீர் மல்க பேசினார். ஆனால் அது அவரது குடும்பத்தையே குறிவைக்கின்றது என்றால் பெரும் கவலைதான் அதிபருக்கு.

Leave a Reply

Your email address will not be published.