வீடு தேடி டோர் டெலிவரி செய்திட வரும் அமேசானின் குட்டி விமானம்

Amazon-Prime-Air-Nimblechapps

ஆன் லைன் வர்த்தகத்தில் அதிகமாக கோலேய்ச்சும் அமேசான் நிறுவனம் மற்ற ஆன் லைன் வர்த்தகத்தைவிட குறைவாகவே விலை நிர்ணயம் செய்வது அதன் தனிச்சிறப்பு..  இலாபத்தை மட்டும் நோக்கில் கொள்ளாமல், மக்களின் வசதியையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறது அமேசான் நிறுவனம்.

இந்த வகையில் மக்களுக்கு உடனே டெலிவரி செய்ய 30 minutes Delivery என்ற ஒரு புது ஆப்சனை அறிமுகப்படுத்தியுள்ளது அமேசான். இந்த ஆப்சன் படி, அமேசானின் சில பொருட்கள் பெரு நகரங்களின் குடோனில் இருந்தால், அந்த நகருக்குள்ளோ அல்லது புறநகர்ப்பகுதிக்கோ உடனே டெலிவரி செய்து வைக்கப்படும்.

இதை பணியாட்களை வைத்து செய்து வந்தது.  (வாட்ச், பேட்டரி, செல்கள் போன்ற) சிறுசிறு பொருட்களுக்கு பணியாட்கள் சென்று டோர் டெலிவரி செய்வது தேவையற்றது என்று முடிவெடுத்த அமேசான், ஒரு பறக்கும் சிறிய ரோபோ விமானத்தை வடிவமைத்துள்ளது.  இதனை இந்த டோர் டெலிவரிக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த குட்டி விமானம், ஒரு கிலோகிராம் வரை உள்ள பொருட்களை தூக்கிக்கொண்டு, வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே வந்து இறங்கி டோர் டெலிவரி செய்து விட்டு செல்கின்றது. மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்கூடியது.  இந்த சர்வீசின் பெயர் Prime AIR.  இத்திட்டம் இந்தாண்டு இறுதிக்குள் அமேசானால் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.