சுருட்டும் வசதிகொண்ட LG ன் புதிய TV

18-inch-flexible-oled

உலக தொலைகாட்சி வரலாற்றில் என்று பார்த்தால் முதலில் பீரோ சைஸ்க்கு டிவி வந்தது.  1950 களில்.  பின் டிவியின் பிக்சர் டியூப்பை சிறியதாக மாற்றி CRT டிவிக்கள் 1980 களில் வெளிவந்தது. 20 வருடங்களுக்கு பின்னர் மெல்ல LCD பிளாட் டிவிக்கள் வெளிவந்தது 2010 களில் இருந்து LED டிவிக்கள் தற்போது ஸ்மார்ட் டிவி வந்தது.

இப்போது பார்த்தோமானால் பேப்பர் ரோஸ்ட் போல், பேப்பர் டிவிக்கள் வெளிவந்துள்ளது.  இந்த பேப்பர் டிவிக்களை சுருட்டி வைத்துக்கொள்ளலாம்.  இது ஏற்கனவே Samsung நிறுவனம் அறிமுகப்படுத்தியது.  ஆனால் LG இதை வியாபார நோக்குடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

சாதரண மாத காலண்டர் மாட்டுவதைப்போல இதை எடுத்து ஒரு ஆணியில் மாட்டிவிடலாம். மிகவும் துல்லியமாகவும், flexible ஆகவும் உள்ளது.  நல்ல தொழில்நுட்பம் தான் என்றாலும். இது கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கின்றது.

இந்த TV விற்பனைக்கு வந்தால் இப்போது உள்ள பிளாட் டிவிக்கள் மறைந்து போகும் அபாயம் வெகுவாகவே உள்ளது.  ஏனென்றால் இந்த Flex TV கள் இருபக்கமும் காட்சியை தரக்கூடியது.

Leave a Reply

Your email address will not be published.