காளானில் உருவாக்கப்பட்ட பேட்டரிகள்

DSCN5592

நமது அறிவியல் சாதனங்கள் வருகை அதிகரிக்க அதிகரிக்க அதற்கு தகுந்தாற்போல் மனிதனின் அறிவியல் வளர்ச்சியும் தேவைகளும் நீண்டு கொண்டே  போகின்றது.  இந்த வகையில் இப்போது உள்ள ஒரு பெரிய தேவை என்னவென்றால், மனிதன் தயாரித்த கையளவு சாதனங்களுக்கு தேவைப்படும் பேட்டரிதான்.

இந்த பேட்டரியை பொதுவாக சல்பர் மற்றும் துத்தநாகத்தில் தயாரித்து வந்தார்கள்.  பின் சீல்டு பேட்டரிகள் வந்தது.  தற்போது பார்த்தால் தொழில்நுட்பவளர்ச்சியில் ஒரு வகைக் காளானில் இருந்து மின்கலம் தயாரிக்கின்றனர்.

இந்த காளானின் பெயர் Portabellas ஆகும்.  இது நம்ம ஊர் நாய்க்குடை போன்றது.  உண்பதற்கு பயன்படுத்துகின்றார்கள்.  இந்த காளானை 1000 டிகிரி செல்சியஸ்க்கு வெப்பப்படுத்தும்போது நானோ ரிப்பன்கள் உருவாகின்றது.  இது கார்பன் எலக்ட்ரோலைட் போன்று செயல்படுகின்றது.

150929142522_1_540x360

இந்த காளானைப்பயன்படுத்தி உருவாக்கும் மின்கலம், தற்போது உள்ள மின்கலத்தைவிட அதிக நேரம் மின்சாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் தன்மை வாய்ந்தது.  செலவு குறைந்ததாகவும், இலகுவானதாகவும் இருக்கும்.  2020 க்குள், ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்து, பல மின்சாதனங்களில் இந்த வகை பேட்டரிகள் பயன்படப்போகின்றது.

Leave a Reply

Your email address will not be published.