கணவர் உயிரோடு இருக்கும்போதே இறப்புச்சான்றிதழ் வாங்கிய மனைவி

Sanjay-Kumar_certificate

கணவர் இறந்துவிட்டதாகக் கூறி போலி ஆவணம் தயாரித்து, ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக மனைவி, மகன் கைது செய்யப்பட்டனர். சென்னை அசோக் நகர் 11-ஆவது அவென்யூவைச் சேர்ந்தவர் ஜா.கிறிஸ்துதாஸ் என்கிற பாபு. இவருக்குச் சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலம் இரண்டாம் கட்டளையில் உள்ளது.

இந்த நிலத்தை சிலர் போலி ஆவணம் மூலம் அபகரித்து இருப்பதாக சென்னை பெருநகரக் காவல் துறையின் நிலமோசடி தடுப்புப் பிரிவில் அண்மையில் பாபு புகார் செய்தார். விசாரணையில் பாபு இறந்துவிட்டதாகக் கூறி, போலி ஆவணம் தாக்கல் செய்யப்பட்டு நிலம் அபகரிக்கப்பட்டிருப்பதும், மோசடியில் பாபுவின் மனைவி டயானா (53), மகன் நிர்மல்குமார் (24) ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில், கணவருக்கு தெரியாமல் நிலத்தை விற்பதற்காக பாபு இறந்துவிட்டதாக டயானா போலி இறப்புச் சான்றிதழ் பெற்று நிலத்தை விற்றிருப்பதும், அதற்கு நிர்மல்குமார் துணையாக இருந்துள்ளதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இருவரையும் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.