சிறைச்சாலை கழிவறை வழியாக தப்பிக்கும் போது தலை மாட்டிக்கொண்ட பாிதாபம்

images (17)

பிரேசில் நாட்டில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் அங்குள்ள கழிவறை வழியாக தப்பிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நகர் ஒன்றில் உள்ள சிறைச்சாலையில் நடுத்தர வயதுள்ள கைதி ஒருவர் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் தன்னுடன் இருந்த கைதிகளிடம் ‘விரைவில் சிறையை விட்டு தப்பிவிடுவேன் என்றும், அதற்காக நூதன திட்டம் ஒன்றை வைத்துள்ளதாக தெரிவித்து வந்துள்ளார்.

திரைப்படங்களில் வருவது போல், சிறை அறையின் நிலத்தை துளையிட்டு சிறிய சுரங்கம் போன்று அமைத்து அதுவழியாக தப்புவது போல் இந்த கைதியும் ஒரு அதிரடி திட்டம் தீட்டியுள்ளார். அதாவது, சிறையில் இருந்த கழிவறை வழியாக துளையிட்டு தப்புவதற்கு திட்டமிட்டார்.

இதனை செயல்படுத்தும் விதமாக சில தினங்களுக்கு முன்னர் கழிவறை வழியாக துளையிட்டு முதலில் தலையை உள்ளே விட்டு சிறிது சிறிதாக நுழைய முயற்சி செய்துள்ளார். பாதி உடல் உள்ளே சென்ற நிலையில், அவரது உடல் முழுவதும் மனித கழிவுகள் பூசப்பட்டு அலங்கோலமாக காட்சி அளித்துள்ளார்.

இதனை சிலர் வீடியோ படமும் எடுத்துள்ளனர். சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர், அந்த கைதியால் முழுவதுமாக வெளியே செல்ல முடியாமல் திணறியுள்ளார். பின்னர், முயற்சியை கைவிட்டு வெளியே வர முயன்றும் முடியாமல் போராடியுள்ளார். இதனை கவனித்த சக கைதிகள் அவரது காலை பிடித்து இழுத்து வெளியே விட்டுள்ளனர்.

எனினும், எந்த நகர சிறைச்சாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்ற தகவல்கள் வெளியாகவில்லை. சமூக வலைத்தளங்களில் கடந்த 29ம் திகதி வெளியான இந்த வீடியோவை இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.