வடகொியாவுக்கு எதிராக பொருளாதார தடை – ஹைட்ரஜன் குண்டின் எதிரொலி

north-korea-has-hydrogen-bomb-becomes-powerful-nuclear-state-1449755741-8623

புதிய பொருளாதார தடை விதிக்கப்படும் என்று ஹைட்ரஜன் குண்டு சோதனையில் ஈடுபட்ட வடகொரியாவிற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

வடகொரியாவின் நடவடிக்கையானது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு தெளிவான எச்சரிக்கை என்று கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. வடகொரியா சார்பில் அணுஆயுத பரிசோதனையினால் முக்கியமான எச்சரிக்கை எழுந்து உள்ளது தொடர்பாக 15 நாடுகள் அடங்கிய ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் அவசரகூட்டம் நடைபெற்றது. முன்னதாக பாதுகாப்பு உறுப்பு நாடுகள், வடகொரியாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க தயாரகி வருவதாக கூறியது.

”வடகொரியாவின் நடவடிக்கை மற்றும் மீறலுக்கு எதிராக, பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் புதிய பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் கொண்டுவருவதற்கான பணியை தொடங்க உள்ளது, பாதுகாப்பு கவுன்சில் நாடுகள் வடகொரியாவின் சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. வடகொரியாவின் நடவடிக்கையானது பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறுவது ஆகும்… சர்வதேச நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு எதிராக இருப்பது தொடர்கிறது,” என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியா தனது அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாமல் அந்த நாடு, இப்படி தான் நினைத்ததை நடத்திக்காட்டி வருவது உலக அரங்கை அதிர வைத்து வருகிறது.

இதுவரை அணுக்குண்டுகளையும், அணு ஏவுகணைகளையும் சோதித்து பார்த்து வந்த வடகொரியா முதல் முறையாக அணுக்குண்டை விட அதிபயங்கரமான ஹைட்ரஜன் குண்டை வெடித்து நேற்று சோதித்துள்ளது. இதற்கு உலக நாடுகள் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கி மூனும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் வடகொரியா ஹைட்ரஜன் குண்டு சோதனையில் ஈடுபட்டது தொடர்பாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயிடம் பேசினார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
கருத்துகள்

Leave a Reply

Your email address will not be published.