சோர்விலிருந்து விடுபட்டு புத்துணர்ச்சி அடைய எளிய வழிகள்.

tired

மிகுந்த வேலை பளுவால் ஏற்படும் சோர்விலிருந்து விடுப்பட்டு புத்துணர்ச்சி அடைய எளிய வழிகள்!!!

சில பன்னாட்டு நிறுவனங்கள் தங்களிடம் வேலை செய்பவர்களுக்கு இலவசமாக லேப்டாப்பை  பயன்படுத்த கொடுக்கின்றன.  இது வேலை பார்ப்பவர்கள் மேல் இருக்கும் அக்கரையினால் அல்ல.  வீட்டிற்குச் சென்றாலும், லீவில் சென்றாலும் கூட நிம்மதியாக இருக்க விடாமல் வேலை செய்ய வைக்க அவர்கள் போடும் தூண்டில்தான். வேலை செய்யும் இடத்தில் இருந்தவாறே ஈஸியாக செய்யக் கூடிய பயிற்சிகள் உள்ளன.  அப்படி செய்தால் அவர்கள் தங்கள் உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ள முடியம்.  வேலை, வேலை என்று அலைந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள் பலர்.  அவர்களது வாழ்க்கை சோம்பலில் தொடங்கி சோர்வில் போய்த்தான் முடிகிறது. இதில் இருந்து விடுபட அவர்களுக்கு இரண்டு வழிகள் தான் இருக்கிறது.  ஒன்று அந்த வேலையை கைவிடுவது.  மற்றொன்று உற்சாகம் மற்றும் புத்துணர்வு அடைய உதவும் எளிய வழிகளில் ஈடுபடுவது.  யோகா செய்வதினால் நமது உடல் புத்துணர்ச்சி பெறுகிறது.  நீங்கள் சோர்விலிருந்து உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சி அடைய செய்ய வேண்டிய அந்த எளிய வழிகளை பற்றி இனி பார்ப்போம்.

 

  1. உடலுக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுக்கள்.

உங்களில் ஒவ்வோருவரும் பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபாட்டுடன் விளையாடி இருப்பீர்கள்.  முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பது போல, உடலுக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுக்களின் மூலமாகத்தான், உங்களது உடல் சோர்வை எளிதாக போக்க முடியும்.  கால்பந்து வாலிபால், கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்கள் எதுவாக இருந்தாலும் சரி. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அரை மணி நேரமாவது விளையாடுங்கள்.  இது உங்களுக்கு உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சியைத் தரும்.

  1. மனைவியின் கையால் மசாஜ்

ஒரே இடத்தில் கம்ப்யூட்டர் அருகிலேயே அமர்ந்து வேலை செய்துக் கொண்ழருக்கிறீர்கள்.  இதனால் உடல் வெப்பமடைகிறது.  இது உடல் சோர்வு ஏற்பட ஒரு காரணமாகிறது.  எனவே அதை நீக்குவதற்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள்.  இதற்காக நீங்கள் ஜப்பான், பிலிப்பைன்ஸ், மலேசியா என்று வெளிநாடுகளுக்கோ, மசாஜ் சென்டர்களுக்கோ போக வேண்டிய அவசியம் இல்லை.  உங்களது வாழ்க்கைத் துணைவியின் கையால் எண்ணெய்யை எடுத்து நீவி விட சொல்லுங்கள்.  அதைவி்ட சிறந்த மசாஜ் வேறு எதுவும் இல்லை.  (வாழ்க்கைத் துணைவி இல்லாதவர்கள், மசாஜ் சென்டர்களுக்குத் தான் செல்ல வேண்டும்.)

  1. யோகா.

உடல் மற்றும் மனத்தை ஒரு நிலையாக வைத்துக் கொள்ள உதவும் ஒரு சிறந்த பயனுள்ள பயிற்சிதான் யோகா.  காலை மற்றும் மாலை வேளைகளில் ஒரு கால் மணி நேரம் ஒதுக்கி யோகா பயிற்சி செய்யுங்கள்.  இதை பழக்கமாக பின்பற்றி வாருங்கள்.  உங்களது உடல் நிலையில் பயனுள்ள முன்னேற்றம் காணலாம்.

  1. தியானம்

தினந்தோறும் காலை, மாலை இருவேளைகளில் தியானம் செய்து வாருங்கள். இந்த பயிற்சி உங்களது உடல் சோர்வை போக்கும்.  மனதை ஒருமுகப்படுத்தும். உங்கள் வேலையிலும் முன்னேற்றம் காண உதவும்.

  1. நீச்சல் பயிற்சி

நீச்சல் பயிற்சி செய்யும்படி பரிந்துரைக்கப்படுகிறது.  யாருக்கு! மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வு உள்ளவர்களுக்கு.  அதுவும் கட்டாயம் செய்யும்படி வற்புறுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த பயிற்சி உங்கள் உடலின் அனைத்து பாகங்களையும் இயங்கச் செய்து நன்மையை விளைவிக்கக் கூடிய பண்புடையது.

  1. எளிதான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்

வேலை செய்யும்பொழுதே உங்களது உடல் சோர்வை குறைக்க இந்த ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் உதவுகின்றன.  கை, கால்களை நீட்டி, மடக்கிச் செய்யும் இந்த பயிற்சிகள்  உங்கள் உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சியைக் கொடுக்கின்றன.  வேலைக்கு இடைவேளையில் ஒரு பத்து நிடங்களாவது இந்த ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளில் ஈடுபட்டாலே போதுமானது.

  1. உடலுறவு

இது சிந்திக்கக்கூடிய விஷயம்.  உடலுறவும் கூட ஒரு வகையான உடற்பயிற்சிதான்.  சீரான முறையில் உடலுறவு வைத்துக் கொள்வது உங்கள் மனதுக்கும் உடலுக்கும் நல்லது.  இது உங்களது உடல், மற்றும் மனம் இரண்டையும் ரீலாக்ஸ்ஸாக வைத்துக் கொள்ள உதவுகிறது.  உடல் சோர்வை குறைக்கிறது.  புத்துணர்ச்சி மற்றும் உற்சாகம் அடைய வைக்கிறது.  உடலுறவில் ஈடுபடுவது மிக எளிதான வழி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.