ஐ.எஸ் தீவிரவாதிகளை வேவு பார்க்க இராணுவ எலிகள் – ரஷ்யா

rat-soldier-20131022-450

ரஷ்யா கடந்த வருடத்தில் ஐ.எஸ். தீவிராவதிகளுடன் போரிட்டு களைத்துப்போனது போலும். மேலும் இனிமேல் உயிரிழப்புகள் வேண்டாம் என்று மனிதர்களுக்கு பதில் எலிகளை இராணுவத்தில் சேர்த்துள்ளது.

இதற்கு காரணமும் இருக்கின்றது. எலிகளின் மோப்ப சக்தி மிக அதிகம்.  இதனால் இது நாய்களை விட துல்லியமாக செயல்படுகின்றன.  மேலும் நாய்களை உளவு பார்க்க அனுப்ப முடியாது. ஆனால் எலிகளை அனுப்பலாம்.  இது மிகவும் சிறியதாக இருப்பதால் உடனே நுழைந்து வெளிவந்துவிடும். எதிரிகளின் கண்களுக்கும் தெரியாது.

இந்த எலியின் மூளையை கட்டுப்படுத்தும் மைக்ரோசிப்கள் உள்ளது. எலிகள் கன்னிவெடிகள், வெடிகுண்டு, ஆயுதம் முதலியவற்றை தேடிக்கண்டுப்பிடிக்கின்றன. இது மூளையிடமிருந்து சிக்னல்களைப் பெற்றுக்கொண்டு இதை இராணுவத்திடம் தெரிவிக்கின்றது.

இதனால் இராணுவத்தினர் பாதுகாக்கப்படுகின்றனர். எலிகள் சில சமயம் தற்கொலைப்படைகளாகவும் மாறிவிடுகின்றன. இதனால் ரஷ்யா ராணுவம் எலிகளுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருக்கின்றது.  இனிமேல் ஐ.எஸ். கன்னிவெடிக்கு எல்லாம் காசு செலவு செய்யத்தேவையில்லை, எலிப்பொறிக்கு காசு செலவு செய்யவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.