SD, DDR, DDR2, DDR3 வரிசையில் புதிதாக MeRAM

images (16)

RAM என்பது கணினிகளில் பயன்படுத்தப்படுகின்றது.  இந்த RAM கள் முதன்மை நினைவகம் ஆகும். கணினி இயங்கும் போது Processor ன் வேகத்திற்கு இணையாக Hard Disk ல் இருந்து டேட்டாவைப் பெற முடியாது.  மேலும் Process Execute ஆகும் வரை Process யை தற்காலிகமாக சேமித்து வைக்க இந்த RAM ஆனது பயன்படுகின்றது.

இந்த RAM  ஆனது SD, DDR, DDR2, DDR3 என்ற வரிசையில் MeRAM என்று புதிதாக வந்துள்ளது. இந்த RAM கள் ஒன்றுக்கொன்று Memory Capacity யையும், விலையையும் வேறுபட்டிருக்கும்.  இந்த புதிய MeRAM  ஆனது (Magneto Electric Random Access Memory ) iEEE ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது காந்தவிசைகளால் செயல்படுகின்றது.  இதன் மூலம் அதிக டேட்டாக்களை சேமிக்க முடியும். சாதரண மைக்ரோ சிப்களை விட அதிகமாக Memory உடையது.  இதன் பின்னணியில் எலக்ட்ரானின் மின்காந்த விசைக்கோட்பாடு உள்ளது.

இந்த மின்காந்தத்தின் மூலம் சிறப்பாக டேட்டாவை செயல்படுத்த முடியும்.  இந்த டெக்னாலஜியில் ஹார்டு டிஸ்க்கும் தயாரிக்கப்படலாம். அப்படி தயாரிக்கப்பட்டால் இப்போதிலிருக்கும் ஹார்டு டிஸ்கைவிட பத்து மடங்கு அதிகமாக தரவுகளை சேமிக்கலாம். இது தான் 2016 ன் புதிய தொழில்நுட்பமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.