ஸ்மார்ட் போன் ஒழித்த சாதனங்களின் பட்டியல்

images (13)

எல்லார் கைகளிலும் போன் இருக்கின்றது.  அதில் பாதிப்பேருக்கு ஸ்மார்ட்போன் இருக்கின்றது. இந்த ஸ்மார்ட் போன்தான் தற்போதைய தொழில்நுட்பத்தின் உச்சம் என்று தன்னை தானே விளம்பரம் படுத்திக்கொண்டு முன்னிலையில் நிற்கின்றது.  எல்லாம் சரிதான் இந்த ஸ்மார்ட் போன் வளர்ந்து வரும் போது அதன் பாதையில் எத்தனை சாதனங்களை உருத்தெரியாமல் அழித்துவந்துள்ளது….!

இந்த ஸ்மார்ட் போனில் கேமராவானது HD ஆக உள்ளது.  முன்பெல்லாம் பொருளை ஸ்கிரீனில் பார்த்து எடுக்கும் Point Shot Camera என்ற தொழில்நுட்பம் இருந்தது.  இது பத்து வருடங்களாக இருந்து வருகின்றது. இதன் விலை அப்போதே 30000க்கும் மேல்.  ஆனால் ஸ்மார்ட் போன்கள் வந்தவுடன் யாரும் இதை பொழுது போக்குக்காக வாங்குவதில்லை. வீட்டுத் தேவைகளுக்கு படம் எடுக்க எல்லாம் ஸ்மார்ட் போனே போதும் என்று வந்துவிட்டார்கள். ஒரு சில வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்களை தவிர யாரிடமும் இந்த கேமரா இருக்காது.

அதே போல் ஐபாட் மற்றும் MP3 player களை ஒரு 5 வருடங்களுக்கு முன்னால் பார்த்தீர்கள் என்றால் மூலை முடுக்கெல்லாம் வைத்துக்கொண்டு பாட்டுக்களை கேட்டுக்கொண்டு இருப்பார்கள். இந்த ஐபாட் ஆனது அதிகபட்சமாக 3000 வரை விற்றது.  ஆனால் ஸ்மார்ட் போன் வந்த பிறகு ஐபாட், Mp3 player என்ற வார்த்தை காணாமல் போனது.

Game Play station என்பது கூட இப்போது குறைந்து வருகின்றது. நல்ல விலையில் ஸ்மார்ட் போன் வாங்கி விடுகின்றார்கள்.  இதில் தேவையான Game களை இயக்கிக்கொள்கின்றனர்.  இதனால் 7000 ருபாய்க்கும் அதிகமாகி உள்ள Play Station கள் இப்போது விற்பனை குறைந்து விட்டது.

வீட்டில் பிள்ளைகளிடம் கணினி வேண்டுமா? ஸ்மார்ட் போன் வேண்டுமா என்றால் எல்லோரும் ஸ்மார்ட் போன் தான் கேட்பார்கள். இந்த ஸ்மார்ட் போன்கள் கணினியின் விற்பனையும் குறைத்துவிட்டது.  வர்த்தக ரீதியாக ஸ்மார்ட் போன் கணினியின் விற்பனையை குறைத்துவிட்டது.

இப்படி நிறைய மாற்றங்களை வெறும் ஐந்தாண்டு வளர்ச்சியில் செய்து விட்டது.  இந்த ஸ்மார்ட் போன்.

Leave a Reply

Your email address will not be published.