சீனாவில் பேருந்துக்கு தீ வைத்து 14 பேர் பலியாகியுள்ளனர்

download (25)

சீனாவின் வடமேற்கு பகுதியில் பேருந்து ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்தில் குறைந்தது 14 பேர் பலியாகினர்.  32 பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய நபரான மா யாங்பிங்கை நிங்ஜியா ஹுய் சுயாட்சி பகுதியில் தேடும் பணியில் நிங்ஜியா மக்கள் பாதுகாப்பு மண்டல துறை ஈடுபட்டுள்ளது.  சீனாவின் ஹெலன் கவுண்டி பகுதியில் உள்ள யின்சுவான் நகரில் பர்னிச்சர் பொருட்கள் விற்கும் கடை அருகே இன்று காலை 7 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.  இதில் 14 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 32 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.  இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சீனாவில் கடந்த காலங்களில் இது போன்ற தீ வைப்பு சம்பவங்களை கலகக்காரர்கள் நடத்தியுள்ளனர்.  இது குறித்து போலீசார் கூறும்போது, யாங்பிங் 3 கார்களுக்கு சொந்தக்காரர்.  சந்தேகத்திற்குரிய நபர் மற்றும் கார்களின் நம்பர் பிளேட்டுகளை நிங்ஜியா பகுதியை சேர்ந்த போலீசார், பல்வேறு சாலை மற்றும் நெடுஞ்சாலையின் நுழைவு பகுதிகள் மற்றும் வெளியேறும் பகுதிகளில் வைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த பேருந்து மாநில அரசின் யின்சுவான் பொது போக்குவரத்து நிறுவனத்திற்கு உரியது.  அது யின்சுவான் ரெயில்வே நிலையத்திற்கு சென்று கொண்டு இருந்துள்ளது.  சீனாவின் சினா வெய்போ சமூக வலைதளத்தில், தீ வைப்பு சம்பவத்தினால் பேருந்து முழுவதும் எரிந்து கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.