எளிதான உடற்பயிற்சிகள்

aerobics-workout

 

நீங்கள் அமர்ந்து கொண்டே வேலை செய்யும் பணியில் உள்ளவரா?  அப்படியானால் கழுத்துவலி, இடுப்புவலி, முதுகு வலி, தோள்பட்டை வலி மற்றும் உடல் சோர்வு உங்களை வாட்டி வதைக்குமே.  காலையில் ஒரு நாள் கூட உங்களால் அமைதியாய் எழுந்திருக்க முடியாத நிலைகள் கூட ஏற்படுமே.  அதற்கு அலுவலகம் செல்வோர் எளிதில் எடையை குறைப்பதற்கு உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் மிகவும் தேவையானது.  குறைந்த பட்சம் நடைபயிற்சியாவது செய்யுங்கள்.  இன்றைய பன்னாட்டு நிறுவன வேலைகள் வேலையின் பின்னே கழுத்தில் சங்கிலி கட்டிய நாய் போல் ஓடவிடுகிறது.  கொஞ்சமும் ரெஸ்ட் இல்லை.  பதட்டத்தினால் கூட உடல் நல பாதிப்புகளும் ஏற்படுகிறது.  இதற்சு நல்ல தீர்வு இருக்கிறது.  அதாவது நீங்கள் வேலை செய்யும் இடத்தில் அமர்ந்தவாறே சில உடற் பயிற்சியை செய்ய ஆரம்பியுங்கள்.

வேலை செய்யும் இடத்தில் இருந்தவாறே எளிதாக செய்யக் கூடிய பயிற்சிகள்.

  1. தோள்பட்டை சுழற்சி.

உங்கள் இரு தோள் பட்டையையும் முன்னும் பின்னுமாக சுழற்சி முறையில் சுற்ற வேண்டும்.  நன்றாக மூச்சை இழுத்துவிட வேண்டும்.  இது உங்கள் கழுத்து மற்றும் தோள்பட்டை வலிகளுக்கு நல்ல பயனைத் தரும்.  இந்த பயிற்சி மன அழுத்தம் மற்றும் டென்சனிலிருந்து விடுதலை பெறச் செய்யம்.

  1. கை சுழற்சி

உங்கள் இருக்கையில் உட்கார்ந்தவாறே உங்கள் இரு கைகளையும் நீட்டி, மணிகட்டு பகுதிகளை வலது மற்றும் இடது புறமாக நன்கு சுழற்சி முறையில் சுற்ற வேண்டும்.  5 நிமிடங்கள் வரையில் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.  இந்த பயிற்சி கைவலி ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

  1. கால் நீட்சி

இந்த பயிற்சி வயிறு மற்றும் கால்கள் பகுதிகளுக்கு நல்ல பயனைத் தரக்கூடியது.  நாற்காலியில் உட்கார்ந்தவாறே, உங்கள் கால்கள் இரண்டையும் நேராக நீட்டி, உங்கள் இடைக்கு இணையாக வரும் உயரம் வரை உயர்த்தி, இறக்கி பயிற்சி செய்ய வேண்டும்.  ஐந்து முறை முதல் பத்து முறை வரை இதுபோல செய்தாலே போதுமானது.  கடினமாக இருந்தால் உங்களால் எவ்வளவு செய்ய இயலுமோ அவ்வளவு செய்தால் கூட போதுமானது.

  1. கட்டிப்பிடித்தல் பயிற்சி

உங்களது இடது கையை வலது தோள்பட்டை மீதும், வலது கையை இடது தோள்பட்டை மீதும், குறுக்கே வைத்து (கட்டிப்பிடித்தல் போல) மூச்சை நன்கு இழுத்து விட வேண்டும்.  குறைந்தது மூச்சை 5 நொடிகளாவது அடக்கி விடுவது அவசியம்.

  1. கழுத்தை நீட்டி பயிற்சி

கால்களை சோ்த்து நேராக நிற்க வேண்டும்.  பின்பு இரு கைகளாலும் கழுத்தை இருப்பக்கம் பிடிக்க வேண்டும்.  பிறகு கழுத்து மேலும் கீழுமாகவும், வலது, இடமாகவும் அசைக்க வேண்டும்.  இது தோள் மற்றும் கழுத்து பகுதிகளில் வலியை குறைக்க இயலும்.

  1. கைகள் உயர்த்தி பயிற்சி.

தண்ணீர் பாட்டிலை தம்பல் (Dumbbell) போல பயன்படுத்தி, முழங்கால் வரை மடக்கி, நேராக உயர்த்தி பயிற்சி செய்தல் வேண்டும்.  ஒரே சமயத்தில் இரு கைகளிலும் செய்யாமல், ஒரு கை மாற்றி, மறு கையில் செய்வது அவசியம்.  இதை நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உட்கார்ந்தவாறே செய்யலாம்.  கைவலி ஏற்படாமல் இருக்க இந்த பயிற்சி உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published.