சட்டம் அனுமதித்தால் பலாத்கார குற்றவாளிகளை சுட்டே கொல்வேன்- டெல்லி போலீஸ் கமிஷனர்!

download (24)

டெல்லி: இந்தியச் சட்டம் அனுமதி அளித்தால் பலாத்கார குற்றவாளிகளை சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்ல ஆசை என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்சி விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம், “பெண்கள் பாதுகாப்பு குறித்து நாங்கள் எப்போதும் கவலைப்படுகிறோம்.

பலாத்காரம் உள்பட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை, சட்டம் அனுமதித்தால், சம்பவ இடத்திலேயே துப்பாக்கியால் சுடவோ, தூக்கிலிடவோ விரும்புகிறோம். அத்தகைய அதிகாரத்தை பயன்படுத்த டெல்லி போலீஸ் தயங்காது.பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்வது நல்லது. அதற்காக நாங்கள் பொறுப்பை தட்டிக்கழிப்பதாக கருதக்கூடாது.

பெண்கள் நலனுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பவர்களை விட போலீசார் அதிகமாகவே பெண்கள் நலனுக்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போலீசாரே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.