சிம்புவின் மீதான வழக்கு பீப் பாடல் விவகாரம் – முடித்தது கோர்ட்டு

simbu-anirudh-beep-song

பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவின் முன் ஜாமீன் வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

பெண்களை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பீப் பாடல் வெளியான விவகாரத்தில் நடிகர் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது நடவடிக்கை கோரி, ஜனநாயக மாதர் சங்கத்தினர் கடந்த மாதம் 12-ஆம் தேதி புகார் அளித்தனர். இப்புகாரின்பேரில், பெண்களை ஆபாசமாக சித்திரித்தல், இழிவுபடுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜனவரி 2-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி இருவருக்கும் இரண்டாவது முறையாக அழைப்பாணை (சம்மன்) அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், வழக்குகளில் முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தார்..

வழக்குகள் அனைத்தும் ஜாமீனில் வரக்கூடிய பிரிவு என்பதால் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தை அணுகத் தேவையில்லை. முன்ஜாமீன் தேவை எனில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தையே அணுகலாம். கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் நாளைக்குப் பதிலாக வருகிற 11-ம் தேதி ஆஜராகவேண்டும் போன்ற உத்தரவுகளை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.