ஆண்களின் ஆரோக்கிம்

male fit

பெண்களைவிட ஆண்களுக்குத்தான் அதிக நோய்கள் வருகின்றன.  இதற்கு முக்கிய காரணம் அவர்களின் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையும் தான்.  இன்றைய கால கட்டத்தில் அலுவலுகத்தில் வேலை செய்கின்றவர்கள் அதிகமான வேலைப் பளுவினால் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.  அது ஆணாக இருந்தாலும் சரி! பெண்ணாக இருந்தாலும் சரி! ஒருமுறை ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆளானால் அவர்கள் நாளடைவில் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.  இருந்தாலும். இவர்களுள் ஆண்கள்தான் அதிக மன அழுத்தத்தினால் மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, பதற்றம் போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.  குறிப்பாக 30 வயதை எட்டீய ஆண்கள்தான் இப்பிரச்சனைகளால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.  அழகை அதிகரிக்க நினைக்கும் ஆண்கள் அன்றாடம் செய்யும் தவறுகளை தவிர்க்க வேண்டும்.  ஆண்கள் தங்களின் வாழ்க்கைமுறை மற்றும் பழக்கவழக்கங்களில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.  இப்படி ஏற்படுத்தினால் கண்டிப்பாக அதிக ஆயுள்  அதிகரிப்பதோடு நோயின்றி இன்பமான வாழ்க்கையை வாழ முடியும்.  ஒவ்வொரு ஆணும் சந்தோஷமாக வாழ கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் கட்டாயம் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

 1. நேரத்திற்கு வீட்டிற்கு செல்லவும்

அலுவலகத்தில் வேலை இருந்து கொண்டுதான் இருக்கிறது.  அதற்காக அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்தால் என்னவாவது.  வேலை குறைகிறதோ இல்லையோ, நம்முடைய ஆரோக்கியம் தான் பாதிக்கப்பட்டுக் கொண்டே வரும்.  ஆபிஸில் அதிக நேரம் வேலை செய்வது மனஇறுக்கம் மற்றும் பதற்றத்தை உண்டு பண்ணுகிறது.  இதனால் ஆரோக்கியம் மற்றும் சந்தோஷம் பாதிப்படையச் செய்கிறது.

 1. குடும்பத்தினருடன் நேரத்தை செலவழியுங்கள்.

தனிமையில் இருப்பதை தவிர்த்து விடுங்கள்.  குடும்பத்தினருடன் கூடி மகிழ்ந்து பேசுங்கள். குடும்பத்தோடு சுற்றுலா சென்று வாருங்கள்.  உறவினர்களிடம் உறவுகள் மேம்பட பேசுங்கள்.  நண்பர்களிடம் அளவளாவி பேசுங்கள்.  இது ஆயுளை அதிகரிக்கும்.  தனிமையில் இருப்பவர்கள் இருதய நோயால் மிகுந்த அவஸ்தைக்கு ஆளாக நேரிடும்.

 1. மீன் சாப்பிடவும்

மீனில் ஒமேகா-3ஃபேட்டி ஆசிட்  அதிகம் உள்ளது. .மற்றும் புரோட்டீனும் அதிகமாக உள்ளது..  இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.  எனவே மட்டன், சிக்கனை அதிகம் சாப்பிடுவதைவிட, மீனை தவறாமல் வாரம் 2 முறை உணவில் சோ்த்து சாப்பிடுங்கள்.

 1. .சூரியனுடன் விளையாடுங்கள்

தினந்தோறும் சூரிய ஒளியில் 15-20 நிமிடங்கள் இருங்கள்.  இதனால் மாரடைப்பு, நீரிழிவு உயர் இரத்த அழுத்தம் மற்றும் சாதாரண இருமல் கூட உடலை அணுக விடாமல் தடுக்கிறது .  மற்றும் உடலுக்கு வேண்டிய வைட்டமின் “ டி “ சத்தும் கிடைக்கிறது.  இருப்பினும் அளவுக்கு அதிகமாக சூரிய ஒளி சருமத்தில் படுமாயின் அது சரும புற்றுநோய் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.  எனவே எச்சரிக்கையாய் இருங்கள்.

 1. அதிக நேரம் டி.வி.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் வராதுமாக டிவியைத் தான்  அனேகம் பேர் போடுகிறார்கள்.  முதலில் அவற்றை தவிர்க்க வேண்டும்.  ஏனென்றால் டிவி பார்க்காதவர்களைவிட டிவி அதிகம் பார்ப்பவர்களுக்குத்தான் அதிக அளவு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.  எனவே டிவி பார்ப்பதை தவிர்த்து கொஞ்ச நேரம் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

 1. அளவாகக் குடிக்கவும்

மது அருந்துவதாக இருந்தால் அளவாக குடிக்க வேண்டும்.  இல்லாவிடில் அதுவே இதய நோய்க்கு வழிவகுத்து விடும் என்று ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒருக்கால் உங்களுக்கு ஏற்கனவே இருதய பிரச்சினை இருந்தாலோ அல்லது பரம்பரையில் யாருக்கேனும் இதய பிரச்சினை இருந்தாலோ மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

 1. இரத்த சர்க்கரை அளவை கவனியுங்கள்.

இன்றைய உலகில் பெரும்பான்மையான மக்கள் முன்-நீரிழிவினால் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இந்த முன்-நீரிழிவை நீக்க தினந்தோறும் உடற்பயிற்சி செய்யுங்கள்.  கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் அதிகமான நார்ச்சத்து உணவுகளை சாப்பிட்டு வாருங்கள்.  உணவில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.  இரத்தத்தில் சர்க்கரையின் அளவை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

 1. PSA பரிசோதனை

ஆண்கள் தனது புரோஸ்டேட்டின் ஆரோக்கியம் பற்றி நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.  30 வயதிற்கு மேல் வருடத்திற்று ஒரு முறை PSA பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.  புரோஸ்டேட் புற்றுநோய் இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம்.  ஏனென்றால் புரோஸ்டேட்டில் கட்டிகள் வளர்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.  எனவே ஆண்கள் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

 1. கருவுறுதல்

தற்பொழுது இளம் வயதினரால் கூட குழந்தை பெறுவதில் பிரச்சினை ஏற்படுகின்றது.  இதற்குக் காரணம் விந்தணுவை அழிக்கும் காரணிகளான லேப்டாப்பை மடியில் வைத்துக் கொண்டு பயன்படுத்துவது, சுடுதண்ணீரில்குளிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

 1. மாட்டிறைச்சி கூடாது.

மாட்டிறைச்சியை விரும்பி சாப்பிடும் ஆண்கள் பலர் உள்ளனர்.  ஆனால் மாட்டிறைச்சியை ஆண்கள் அதிக அளவில் சாப்பிட்டுவந்தால் இதய நோய், பெருங்குடல் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகின்றன.

 1. புகைப்பிடிப்பது

எல்லோருக்குமே தெரியும்!  இது ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்கம் என்று.  என்றாலும் மன அழுத்தம் குறைய பல ஆண்கள் இப்பழக்கத்தை மேற் கொள்ளுகிறார்கள்.  புகை பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் பிரச்சினைகள் ஏற்பட்டு அவஸ்தைக்கும் உள்ளாகிறார்கள்.

 1. மூட்டுவலியில் கவனம் தேவைஃ

மூட்டுவலி வருவதற்கு பலகாரணங்கள் உள்ளன.  ஆரம்பத்திலேயெ மூட்டுவலியை கவனித்துக் கொள்ள வேண்டும்.  அப்படி கவனிக்காவிட்டால் ஆர்த்ரிடிஸ் ஏற்படக் கூடும்.  ஆகவே மூட்டுவலி இருந்தால் உடனே டாக்டரை அணுகி அதற்கான சிகிச்சையை மேற் கொள்ள வேண்டும்.

 1. அளவான காபி

ஆண்களில் யார் காபியை குறைவாக பருகி, தினந்தோறும் உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைந்து ஆயுள் அதிகரிப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

 1. மஞ்சள்

ஆண்கள் தங்கள் உணவில் மஞ்சள் சோ்த்துக் கொள்வதன் மூலம் டென்சன் மற்றும் உள்காயங்கள் குறைவதோடு மட்டுமல்லாமல் அல்சைமர் என்னும் ஞாபக மறதி ஏற்படுவதற்கான வாய்ப்பையும் தடுக்கிறது

 1. மத்திய தரைக்கடல் உணவு பழக்கம்.

மத்திய தரைக்கடல் உணவு பழக்கமான நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள், தானியங்கள், காய்கறிகள் மற்றும் மீன் போன்றவற்றை ஆண்கள் சாப்பிட்டுவந்தால் வயதான காலத்தில் ஏற்படும் ஞாபக மறதி நோய் தடுக்கப்படுகிறது.  முதுமையில் நினைவுகளை தக்க வைக்க உதவுகிறது.

 1. காலனோஸ்கோபி.

பெண்களைவிட ஆண்களுக்கு பெருங்குடல் புற்றுநோயின் தாக்கம் அதிகம் உள்ளது.  அதிலும் ஐம்பது வயதிற்கு மேல் தான் ஆண்களுக்கு இந்நோய் பெரும்பாலும் தாக்குகிறது.  எனவே ஐம்பது வயதிற்கு மேல் ஆண்கள் காலனோஸ்கோபி என்னும் பரிசோதனையை செய்து கொள்வது நல்லது.  இது ஆயுளை பாதுகாக்க உதவுகிறது.

 1. பீர் குடித்தல்

பீர் குடிக்கலாம்.  ஜாந்தோஹுிமல் என்னும் ப்ளேவோனாய்டு பீரில் உள்ளது.  இது புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.  பிராணிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுபற்றி தெரிய வந்துள்ளது.

 1. இதய நோய்

பெண்களைக் காட்டிலும் ஆண்கள்தான் இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.  ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டுவந்தால் இதய நோயிலிருந்து விடுபடலாம் என்பதுதான்.  ஆகவே ஆரோக்கியமான நல்ல வாழ்க்கை முறையை மேற் கொள்ளுங்கள்.

 1. கொலஸ்ட்ரால்

பெண்களை விட ஆண்கள்தான் மாரடைப்பினால் மரணமடைகின்றனர்.  எனவே கொலஸ்ட்ரால் அதிகமுள்ள உணவுப் பொருட்களான எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

 1. நல்ல வாழ்க்கைத்துணை

நல்ல மனைவி அமைந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறதாம்.  திருமணமாகாமல் அல்லது இன்பமான வாழ்க்கையை வாழாமல் இருக்கும் ஆண்களைவிட, திருமணமாகி துணைவியுடன் இன்பமான வாழ்க்கை வாழ்கின்ற ஆண்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைவது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

 1. விறைப்புத் தன்மை குறைபாடு

அதிகமான மன அழுத்தத்தினால் விறைப்புத்தன்மை குறைபாடானது ஏற்படுகிறது.  இதற்கு டென்சனைக் குறைத்தால் இப் பிரச்சினை குணமாகும்.  இதய நோயின் தீவிரத்தை காட்டுகிறது இந்த விறைப்புத் தன்மை குறைபாடு.  எனவே உங்களுக்கு ரொம்ப காலமா இப் பிரச்சினை இருந்தால் டாக்டரை உடனே சென்று பாருங்கள்.

 1. சோடாவை தவிர்க்கவும்

நண்பர்களுடன் வெளியே செல்லும் பொழுது குளிர்பானம் என்றும் பாட்டில் சோடா என்றும் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  ஏனென்றால் சோடாவில் உள்ள ஒருவகையான செயற்கை இனிப்பூட்டி உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.  பின் நாளாக நாளாக இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

 1. முப்பது நிமிட உடற்பயிற்சி

தினந்தோறும் அரை மணி நேரம் வாக்கிங், சைக்கிளிங், ரன்னிங், ஜாக்கிங் போன்றவற்றை மேற்கொண்டு வந்தால் மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே ஆண்களே! உடனே பயிற்சியை தொடக்குங்கள்.

 1. ஏரோபிக் உடற்பயிற்சி

வாரத்திற்கு சராசரியாக 3 மணி நேரம் எரோபிக் உடற்பயிற்சியை மேற் கொண்டு வாருங்கள்.  மூளையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கச் செய்கிறது.  முளையின் செயல்பாடு மேம்படுகிறது.  முதுமையில் நினைவுகளை தக்க வைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.