சிறுநீரக நோயை குணப்படுத்தும் மாதுளம் பழச்சாறு.

madhulai

சிறுநீரக நோய்களைத் தீர்ப்பதற்று மாதுளம் பழச்சாறு சிறந்தது என லண்டனில் நடத்திய ஆய்வில் தெரிய வருகிறது.

சில சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிஸ் செய்வதற்கு முன்பாக மாதுளம் பழச்சாறு அல்லது புரதச்சத்து அதிகம் உள்ள பிளாஸ்போ பானம் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.  மாதுளம் பழச்சாறு சிறுநீரக கோளாறுகளையும், பக்க விளைவான இதய நோயையும், இறப்பு விகிதத்தையும் குறைப்பது தெரிய வந்துள்ளது.

ஏனென்றால் மாதுளம் பழச்சாறு சாப்பிட்டவர்கள் உடலில் இருந்த தீங்கு செய்யும் பொருட்களை மாதுளம் பழச்சாறில் உள்ள ஆண்எ ஆக்ஸிடெண்டுகள் செயல் இழக்கச் செய்ததால் அவர்கள் நோயின் பாதிப்பு குறைந்ததாக உணர்ந்தனர்.  எ்னறாலும், இந்த சோதனையை இன்னும் அதிகம் பேரிடம் செய்து பார்ப்பது நல்லது என வெஸ்டன் கலிலி மருத்துவ மனையில் இந்த ஆய்வை நடத்திய பட்யா கிறிஸ்டல் தெரிவித்தார்.  இந்த தகவலை டெய்லி எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

மாதுளம் சாப்பிட்டால் ஏற்டக் கூடிய பயன்கள்.

  • இரத்தக் கொதிப்பு குறையும்.
  • கொழுப்பு சத்து குறையும்.
  • ஆண்மை பெருகும்.
  • வெப்பத்தால் ஏற்படும் தோல் சம்பந்தமான நோய்கள் கட்டுக்குள் இருக்கும்
  • ஏற்கனவே ஆய்வாளர்கள், மருத்துவர்களால் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • புரோஸ்ட்ரேட் புற்று நோயை மாதுளம் பழம் மட்டுப்படுத்தும் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்விலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது என்பது நினைவு கூறத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.