இறந்து போய் புதைத்த பெண்ணையும் தோண்டி பாலியல் பலாத்காரம்

rape-41-180x120

உத்தரபிரதேச மாநிலம் ஹதார் மாவட்டம் சடாபாத்தை சேர்ந்த 50 வயது பெண். இவர் கணவருடன் ஆக்ரா அருகே உள்ள பதேபூர் சிக்ரியில் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அந்த பெண் இறந்து விட்டார். உறவினர்கள் அவரது உடலை  அருகே உள்ள லால் தர்வாசா சுடுகாட்டில் புதைத்து உள்ளனர்.

இந்த நிலையில் மறு நாள் காலை பெண்ணின் உடல் கல்லறைக்கு வெளியே கிடந்து உள்ளது அவரது  உடலில் பாலியல் தாக்குதல் நடந்ததற்கான அறிகுறிகள் காணபட்டன. இது குறித்து உறவினர்கள் போலீசில் புகார் செய்து உள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பதேப்பூர்சிக்ரியை சேர்ந்த 40 வயது மதிக்கதக்க ராஜேந்திரா என்பவரை கைது செய்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் உண்மையை ஒப்புகொண்டு உள்ளார்.

உறவினர்கள் பெண்ணின் உடலை புதைத்து விட்டு சென்ற  பிறகு இரவு மது அருந்தி விட்டு வந்து கல்லறையை தோண்டி உடலை எடுத்து குற்ற செயலில் ஈடுபட்டதாக கூறி உள்ளார். பெண்ணின் உடல் பரிசோதனைக்கு பிறகு மீண்டும் 2 வது முறை உறவினர்களால் அடக்கம் செய்யபட்டது.

Leave a Reply

Your email address will not be published.