ஈரோட்டில் குரங்கு ஒன்று நாய்க்குட்டியை தத்தெடுத்தது..!

monky 1

மனிதர்களே நாயைப் போன்று அடித்துக்கொண்டு வாழும் இந்த உலகில் ஒரு குரங்கு தன் குட்டியாக ஒரு நாய்க்குட்டியை தத்தெடுத்து வளர்த்துவருகின்றது.  நம் தமிழ்நாட்டில் ஈரோட்டில் தான் இந்த மனிதா( குரங்கா)பிமான விசயம் நடந்துள்ளது.

சமீப காலமாக ஈரோட்டின் கடைவீதிகளில் ஒரு குரங்கு ஒன்று நாய்க் குட்டி ஒன்றை தன் குட்டிப்போல் கட்டியணைத்து எடுத்துச் செல்கின்றது.  தனக்கு கிடைக்கும் தீனிகளை அன்போடு நாய்க்குட்டிக்கு ஊட்டுகின்றது.  நாய்க்குட்டியும் கொஞ்சமும் பயப்படாமல் தன் அம்மாவைப் போல குரங்கிடம் பழகுகின்றது.monky

இதைப்பற்றி கேட்டதற்கு LKC சாலைப்பகுதியினர் கூறியது : தெருநாய்கள் சிலவை குட்டிநாயை துரத்தி வந்தது அதை மேலிருந்து பார்த்த குரங்கு, வேக வேகமாக கீழிறங்கி நாய்களை துரத்திவிட்டு நாய்க்குட்டியை காப்பாற்றியது. அது முதல் நாய்க்குட்டியை தன் பிள்ளைபோள் எங்குபோனாலும் எடுத்துச் செல்கின்றது.

இதை பார்ப்பவர்கள் எல்லாம் தன்னால் முடிந்த அளவு தீனிகளை இருவருக்கும் கொடுக்கின்றனர். மனிதர்களை விட உயர்ந்தவர்கள் யாருமில்லை என்று நினைப்புதான் ஆனால் இது போன்ற உயிரினங்களின் செயல்கள் அதை பொய்யாக்கிவிடுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.