லேப்டாப்பை மூடினாலும் சிஸ்டம் ஆன் ஆக இருக்க வேண்டுமா?

Close the lid

புதிய லேப்டாப் வாங்கிய எல்லோருக்கும் இந்த பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன.  தொடர்ந்து லேப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இடைவேளைவிட்டு வெளியே செல்லும் போது பாதுகாப்புக்காக லேப்டாப்பை மூடிவிட்டு செல்வது வழக்கம்.  ஆனால் வந்து திரும்பி திறக்கும் போது லேப்டாப் Sleep  ஆகியிருக்கும்.

மீண்டும் கணினியை ஆன்செய்து திரும்பவும் பழைய அப்ளிகேஷன்களுக்கு செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.  மேலும் லேப்டாப்பில் External Monitor கனெக்ட் செய்யும்போது.  அல்லது லேப்டாப்பில் ஏதாவது டவுன்லோடு மற்றும் டிவிடி விரைட் செய்யும் போது மானிட்டர் தேவைப்படுவதில்லை இதனால் நீங்கள் மானிட்டரை மூடி பேட்டரியை சிக்கனம் செய்ய நினைப்பீர்.  ஆனால் கணினி Sleep  ஆகியிருக்கும்.

இதை தவிர்க்க மேற்கண்டவாறு செட்டிங்குக்கு செல்லவும்.  Control Panel\All Control Panel Items\Power Options க்கு சென்று இங்கு Choose what closing the lid does என்பதை கிளக் செய்தவுடன் மேற்கண்ட ஸ்கிரீன் தோன்றும் இதில் When i Close the lid என்பதற்கு நேராக இருக்கும் Combo Box ல் Sleep க்கு பதிலாக Do nothing என்பதை தேர்ந்தெடுக்கவும்.

பின் Save Changes கொடுத்துவிட்டு வெளியே வந்து விடும்.  இப்போது மானிட்டர் மூடியை முடினாலும் கணினி ஆஃப் ஆகாது.

Leave a Reply

Your email address will not be published.