குழந்தையின் எதற்காக அழுகின்றது என்பதை கண்டுபிடிக்க ஆப்

unnamed

தைவான்,ஜன.02 (டி.என்.எஸ்) குழந்தை எதற்காக அழுகிறது என்ற காரணத்தை கண்டறியும் புதிய மொபைல் ஆப் ஒன்றை தைவான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த இரண்டு வருட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனில், நூற்றுக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளின் அழுகையை பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அக்குழந்தைகள் அழும் சத்தத்தை பதிவு செய்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான விதவிதமான அழுகைகளை சேகரித்து இருக்கிறார்கள். அவற்றின் அடிப்படையில், இந்த ‘ஆப்’ குழந்தை ஏன் அழுகிறது? என்பதை தீர்மானிக்கிறது.

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அழுகைக்கான காரணத்தை சரியாக சொல்லிவிடும் இந்த ‘ஆப்’ 92 சதவீதம் வரை துல்லியமாக உள்ளது. The Infant Cries Translator என்ற இந்த ‘ஆப்’ ஆப்பிள், ஆன்ட்ராய்டு கருவிகளுக்கு வெளியிடப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் ரூ.200-க்கு கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.