குடலியக்கம் எவ்வித இடையூறுமின்றி ஆரோக்கியமாக செயல்பட சில டிப்ஸ்.

குடல்

நமது உடல் நன்றாக சரிவர இயங்க வேண்டும்.  அதற்கு குடலியக்கம் எவ்வித தடைகளும் இல்லாமல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டியது கட்டாயமாகும்.  ஏனென்றால் குடல் தான் கழிவுகளை நீக்க பெரிதும் உதவி செய்கிறது.  சரியான சமயத்தில் உடலில் சேரும் கழிவுகளை நீக்காவிட்டால் உடல் ஆரோக்கியம் பழுது பட்டு விடும்.  குடலியக்கம் நன்றாக இயங்கினால் மனிதன் ஒரு நாளைக்கு 3 முறை மலத்தை கழிப்பான்.  ஆனால் தற்போது கெட்ட உணவுகளால் உடலில் கழிவுகள் தேங்கிக் கொண்டே இருக்கிறதே தவிர, அது வெளியேறிய பாடில்லை.  இதனால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.  சிம்பிளான யோகாக்கள் செய்தால் மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.  ஒருவன் மலஜலம் கழிக்காவிட்டால் எந்த வேலையும் சரியாக செய்ய முடியாது.  ஆரோக்கியமான மனிதன் காலையில் எழுந்ததும் மலம் கழிப்பான்.  ஒருவேளை இல்லாவிட்டால் அவனுக்கு மலமிளக்கிகள் தேவை என்று அர்த்தம்.  அதற்காக கண்டகண்ட மாத்திரைகளைப் போட வேண்டாம்.  செரிமானத்தை மேம்படுத்தும் பயனுள்ள சில சூப்பர் உணவுகளை சாப்பிட்டு வந்தாலே குடலியக்கத்தை சீராக்க முடியும்.  இப்போது குடலியக்கம் எந்தவொரு தடங்கலுமின்றி ஆரோக்கியமாக செயல்பட சில டிப்ஸ்களைப் பார்ப்போம்.

குடலியக்கம் எவ்வித இடையூறுமின்றி நன்றாக செயல்பட சில டிப்ஸ்.

  1. கற்றாழை ஜுிஸ்

காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் தண்ணீரில் கொஞ்சம் கற்றாழை ஜெல்லை ஊற்றி கலக்க வேண்டும்.  பின்பு குடிக்க வேண்டும்.  இதனால் உடலில் தேங்கியுள்ள மலம் உடனே வெளியேறும்.

  1. உலர்ந்த கொடிமுந்திரி

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து உலர்ந்த கொடி முந்திரியில் அதிகம் உள்ளது.  இவை கெட்டியான மலத்தை கரையச் செய்து வெளியேற்றுகிறது.  எனவே இவற்றை தினந்தோறும் சாப்பிட்டு வாருங்கள்.

  1. மிளகாய்

மிகவும் காரமான உணவுகளை நிறைய சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  ஆனால் அளவாக உட்கொண்டு வந்தால் குடலியக்கம் நன்கு தூண்டப்படும்.  பின்பு ஆரோக்கியமாக செயல்பட ஆரம்பிக்கும்.

  1. தண்ணீர்

பலம் வாய்ந்த ஒன்று இருக்கிறது என்றால் அது தண்ணீர்தான்.  ஆகவே காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தண்ணீர் குடித்து வாருங்கள்.  அதன் பலனைப் பாருங்கள்.  மேலும் தினந்தோறும் போதிய அளவில் தண்ணீர் சாப்பிட்டு வாருங்கள்.

  1. ஆப்பிள்

குடலியக்கத்தை சீராக்குகிறது ஆப்பிள்.  அதற்கு தினந்தோறும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வாருங்கள்.  மலத்தை கரையச் செய்யும் பொருளான ” பெக்டின் ” இதில் அடங்கியுள்ளது.

  1. தினமும் உடற்பயிற்சி

தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வாருங்கள்.  இது குடலியக்கத்தை சீராக்குகிறது.  மற்றும் உடற்பயிற்சி செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

  1. தயிர்

செரிமான மண்டலத்தில் உள்ள தடைகளை சரி செய்யும் குணம் கொண்டது தயிர்.  எனவே இரவு சாப்பாட்டில் தயிரை சேர்த்துக் கொள்வது, காலையில் மலம் வெளியேறுவதற்கு உதவியாக இருக்கும்.

  1. அருகம்புல் ஜுிஸ்

காலையில் எழுந்ததும் அருகம்புல் ஜுிஸை குடித்து வாருங்கள்.  இப்படி சாப்பிட்டு வந்தால் கெட்டியான மலம் கரைந்து உடனே வெளியேறுகிறது.  மேலும் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது அருகம்புல் ஜுிஸ்.  உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது.

  1. மனஅழுத்தம்

மன அழுத்தம் இருந்தால் குடலியக்கம் பாதிக்கப்படும்.  எனவே மன அழுத்தத்தை குறைக்கும் செயல்களில் ஈடுபடுங்கள்.  தியானம் மற்றும் யோகா போன்றவற்றை செய்து மனதை ரிலாக்ஸாகவும், அமைதியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

  1. காப்ஃபைன் வேண்டாம்

காப்ஃபைன் உள்ள பானங்களை கம்மி படுத்திக் கொள்ளுங்கள்.  அதற்காக முற்றிலும் தவிர்க்க வேண்டாம்.  தினந்தோறும் ஒரு கப் டீ அல்லது ஒரு கப் காபி போதுமானது. ஏனெனில் காப்ஃபைன் செரிமான மண்டலத்திற்கு இடைஞ்சலை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published.