வருடத்தின் முதல் நாளிலேயே வாடிக்கையாளர்களை கடுப்பேற்றிய வாட்ஸ் அப்

whats-app-24-hour-ban-how-fix-not-working-whats-app-plus-unofficial-client-suspended

உலகெங்கும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் பேஸ்புக் நிறுவனத்தின் மெசேஜிங் அப்ளிகேஷனான வாட்ஸ் அப் வருடத்தின் முதல் நாளிலேயே பல பணி நேரம் முடங்கி வாடிக்கையாளர்களை கடுப்பேற்றியுள்ளது. நேற்றிரவு 10 மணியளவில் சில பயனர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பவோ, பெறவோ முடியவில்லை என புகார் எழுந்தது. சில மணி நேரத்திற்கு பிறகு மெல்ல தகவல் பரிமாற்றம் நடந்து வருவதாகவும் பயனர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

தொழில்நுட்ப செய்திகள் வெளியிடும் இணையதளங்கள், உலகளவில் பல மணி நேரம் வாட்ஸ் அப் முடங்கியதற்கான செய்திகளை வெளியிட்டுள்ளன. சேவை முடங்கியதால் கடுப்பான வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள் ட்விட்டருக்கு வந்து வாட்ஸ் அப் குறித்து குறை கூறினர்.

இந்த பிரச்சனை குறித்து வாட்ஸ் அப் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில், “குறிப்பிட்ட சிலருக்கு இன்று வாட்ஸ் அப் சேவை குறுகிய காலம் கிடைக்கவில்லை என புகார் வந்துள்ளது. அதை சரி செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். விரைவில் 100 சதவீத வாடிக்கையாளர்களுக்கும் சேவை கிடைக்கும். சேவை முடங்கியதால் ஏற்பட்ட தடங்கலுக்காக வருந்துகிறோம்.” என்றார். உடனடி மெசேஜிங் சேவையில் உலகளவில்  வாட்ஸ் அப் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.