பெட்ரோல், டீசல் விலை குறைவு ஆண்டின் கடைசி முதல் அமல்

images (5)

பெட்ரோல் விலை லிட்டருக்கு 63 காசுகளும், டீசல் விலை ரூ.1.06 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.இந்த விலைக் குறைப்பு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

அதன்படி, சென்னையில் ரூ.60.28-ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 59.77-ஆகக் குறைந்துள்ளது.
டீசலைப் பொருத்தவரை லிட்டர் ரூ.47.28-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அது ரூ.46.25-ஆகக் குறைந்துள்ளது. விலை மாற்றத்துக்குப் பிறகு தில்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.59.35-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.45.03-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்தது. இதைத் தவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சிறிய முன்னேற்றம் ஆகிய காரணமாக விலை குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.