கும்பகர்ணன்களை எழுப்ப வந்துவிட்டது ஹைபர் அலாரம்

Hyper-Alarm-05

எப்படியாவது நான்கு மணிக்கு எழுந்து Train யைப் பிடிக்கவேண்டும். எப்படியாவது 2 மணிக்கு எழுந்து இந்த புக்கை கரைத்து குடித்துவிட்டு நாளைக்கு Exam ல பாஸ்பண்ணிடனும். அப்படின்னு நிறைய எண்ணங்களை கொண்டு அலாரத்தை செட் செய்துவிட்டு தூங்கிவிட்டால் அடுத்த நாள் அலாரம் எப்படி தான் ஆஃப் செய்தோம் என்றே தெரியாது போட்ட திட்டமெல்லாம் வீணாகிவிடும்.

இதற்கு தான் கண்டுபிடித்திருக்கின்றார்கள் இந்த ஹைபர் அலாரம்.  இது ஒரு பெரிய ஸ்பீக்கரை கொண்டுள்ளது.  இதில் அதிக ஃபிரிகிவென்சி சவுண்டானது வரும்.  இது நம் காதுக்குள் நுழைந்து கும்பகர்ணனையும் தூங்கவிடாமல் செய்து விடும் சக்தி இதுக்கு இருக்கின்றது.  இது மூளையை தொந்தரவு செய்து விடும்.

இந்த ஹைபர் அலாரம் ஆன்டிராய்டு போனுடன் இணைத்துபயன்படுத்தலாம்.  இது பேட்டரி செல்லால் வேலை செய்யக்கூடியது.  Bluetooth ஆல் இயங்கும் இந்த அலாரம் முடிந்தவரை விற்பனையில் கோலேச்சும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published.