Facebook – ன் Free Basic internet service பிரச்சினைகள்

download

சமுக வலைதளத்திலேயே அதிகப்பயனர்களை கொண்டுள்ள நிறுவனம் பேஸ்புக் மட்டும் தான் இந்த பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜீக்பெர்க் தற்போது இலவசமாக இன்டர்நெட் சேவையை வழங்கும் திட்டத்தை கொண்டுள்ளார்.  இதற்காக மார்க் பல செல்போன் நெட்வொர்க் நிறுவனத்துடன் பேசி வருகின்றார்.  அவர்களும் அதை ஒரு மனதாக ஒத்துக்கொண்டுள்ளனர்.

முதன் முறையாக ரிலையன்ஸ் இதை ஏற்றுக்கொண்டு வந்துள்ளனர்.  ஆனால் இதில் நிறைய பிரச்சினைகளும் உள்ளன.

இந்த Free Basic Internet என்பது என்னவென்றால் இலவசமாக ஒரு சில இணையளத்தினை எந்த வித பணமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செலுத்தாமல் பயன்படுத்தலாம்.  இதுதான் இந்த Free Basic Internet.  அதில் என்னதான் பிரச்சினை என்றால்  இந்த இலவச சேவை ஒரு சில இணையதளத்திற்கு மட்டுமே மற்ற இணையதளத்திற்கு கிடையாது.  ஒரு வேலை வேறு வெப்சைட்டை தெரியாமல் உள்ளே சென்றுவிட்டால் உடனே பணம் எடுத்துவிடுகின்றார்கள்.

மேலும் இந்த இலவச வசதிகளால் மக்கள் அனைவரும் இலவச வசதியையே பயன்படுத்துவார்கள். இந்த இலவச வசதி பயனர்கள் அனைவரும் குவிவார்கள்.  இதனால் இந்த இலவச வெப்சைட்டும் கட்டணம் கொடுத்து பயன்பெறும் அளவுக்கு மாறிவிடும்.  மற்ற வெப்சைட்டுகள் அனைத்தும் கட்டணம் செலுத்தும் போது இந்த இலவச வெப்சைட்டுகள் மட்டும் எப்படி விதிவிலக்காகும். போன்ற பல பிரச்சினைகளை சந்திக்கின்றது.

இதனால் இந்த திட்டத்தை செயல்படுத்த சற்று காலதாமதம் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published.