இரவில் சாப்பிடக்கூடாத உணவு வகைகள்.

food for dont nite

நாம் உணவென்று நினைத்து பலவகையான உணவுகளைச் சாப்பிடுகிறோம்.  உண்மையாகச் சொல்லப்போனால் அவை உணவே கிடையாது.  உருனளக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுகளில் விற்கப்படுகிறது.  நாம் விரும்பி சாப்பிடுகிறோம்.  மற்றும் அரிசி மாவில் செயற்கையாக சுவைக்காக இரசாயனம் சேர்க்கின்றனர்.  நம் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு சிறிது இரசாயனமும் சேர்க்கின்றனர்..  பதப்படுத்தப்பட்ட பொருட்கனை ஷாப்பிங் மால்களில்விற்பனை செய்கின்றனர்.  இதனை சாப்பிட்டால் பக்க விளைவுகள் தான் ஏற்படும்.  இதற்கே வியப்படைந்தால் எப்படி!  சாப்பிடவே கூடாத உணவு பட்டியலில் சில வகை உணவுகள் இடம் பெற்றிருக்கின்றன.  நாம் அவற்றை சாப்பிடக்கூடாது.  அதைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.  நாம் அறியாமலேயெ, நம்மோடு தினமும் விளையாடும் நச்சுத்தன்மை கலந்த இரசாயனப் பொருட்கள்.

டயட் சோடா.

விற்பனையாளர்கள் கலோரிகள் இல்லாத டயட் சோடா என்று கூப்பிட்டு, கூப்பிட்டு விற்கிறார்கள்.  இது உடல்நலத்திற்கு தீமையானது என்று சொல்வதே இல்லை.  இதில் காப்ஃபைனும், செயற்கை இனிப்பூட்டிகளும் தான் காரணமாக  அமைகின்றன.  ஒருக்கால் உண்ட மயக்கம் உங்களை அசாதாரணமாக உணர செய்தால் அதற்கு நீங்கள் சாதாரண சோடாவே குடிக்கலாம்.  எந்த ஒரு Flavor சோடாவையும் குடிக்க வேண்டாம் ஏனென்றால் அதில் இரசாயனம் கலந்திருப்பதால் தான்.

மயோனைஸ்

கிரில் சிக்கன் மற்றும் சாண்ட்விச்சுகளுடன் தரப்படுகிறது மயோனைஸ்.  இது தமணிகளை (Arteries) பாதிக்கின்ற உணவாகும்.  அதனால் நீங்கள் விரும்பி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.  இதற்கு பதிலாக ஃப்ரெஷ்ஷான கெட்டி தயிரை உபயோகப்படுத்தலாம்.  பூண்டு, வெங்காயம், தக்காளி, போன்றவற்றுடன் கூட கிரில் சிக்கன் சேர்த்து உண்ணலாம்.

ஊறுகாய்

வீட்டில் சுயமாக ஊறுகாய் தயாரிக்கிறார்கள்.  அதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.  நீங்கள் கடைகளில் வாங்கும் ஊறுகாய்தான் உடலுக்கு தீமையை விளைவிக்கிறது.  ஏனென்றால் இதில் இரசாயனப் பொருட்கள் பதப்படுத்தப் படுவதற்காக சேர்க்கப்படுகின்றன.  இதற்கு மாற்று வீட்டில் தயாரிக்கும் ஊறுகாய்கள் தான்.  இல்லையென்றால் நமது வீட்டருகே வீட்டிலேயே செய்த ஊறுகாய்கள் தயாரித்து விற்றால் அதை வாங்கி உபயோகப்படுத்துங்கள்.

ஃபிளேவர்ட் தயிர்.

அதிகமான ஃபிளேவர்ட் தயிர்கள் மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன.  இவை அனைத்துமே உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்.  ப்ளேவர்ட் தயிரில் எந்த சத்துக்களுமே இல்லை.  வெறும் கிரீம், செயற்கை சுவைகள் மற்றும் ஃபிளேவர்கள் சேர்த்து உற்பத்தி செய்யப்படுகின்றன..  ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது அதிக அளவில் உடலநலத்தை பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.  இதற்கெல்லாம் உங்கள் வீட்டில் தயாரிக்கும் தயிரை உபயோகப்படுத்துவதுதான் சரியான மாற்று உணவாகும்.

வெண்ணெய்.

கடைகளில் விற்கப்படும் வெண்ணெய்களில் எடையை அதிகரிப்பதற்காக எல்.டி.எல எனப்படும் தீய கொழுப்பு சேர்த்து தயாரிக்கிறார்கள்.  இது இதயத்தை பாதிக்கும் செயலாகும்.  உடலில் உள்ள செல்கள் விரைவில் சக்தியை இழந்து விடுகின்றன.  ஆகவே இயற்கை உணவுகள் வீட்டில் தயாரிப்பது தான் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையானது.  பழைய முறைப்படி வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுங்கள்.  அதிலும் முக்கியமாக பால் உணவுப் பொருட்களை கடைகளில் வாங்குவதை தவிர்த்து விடுங்கள்

Leave a Reply

Your email address will not be published.