தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி கைது

01-parthasarathy-dmdk-300

தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களை இழிவு படுத்தியதாகக் கூறி, அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற செய்தியாளர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் அன்பரசன் உள்ளிட்ட சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எம்.எல்.ஏ பார்த்தசாரதி உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் வடபழனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஜெயலலிதாவை கேள்வி கேட்க செய்தியாளர்களுக்குத் துணிவில்லை என்று கூறி “தூ” வெனத் துப்பினார்.இதனால், விஜயகாந்த் செய்தியாளர்களை இழிவு படுத்தியதாகக் கூறி, அதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று செய்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.