ஏர் இந்திய விமானத்தில் எலி

மும்பையிலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் எலி இருந்ததால், மீண்டும் மும்பை வந்து சேர்ந்தது. மும்பையிலிருந்து 225 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று அதிகாலை 7.35 மணிக்கு லண்டன் கிளம்பி சென்றது. விமானம் கிளம்பி 6 மணி நேரத்திற்கு பிறகு ஈரான் வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது, எலி ஒன்று விமானத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்து விமானம் மீண்டும் மும்பை திரும்பி வந்தது. அங்கிருந்து வேறு விமானம் மூலம் பயணிகள் லண்டன் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து விசாரணை நடத்த ஏர் இந்தியா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply