சென்னை Foxconn ஆலை மூடல் | மீண்டும் திறக்க தமிழக அரசு பரிந்துரை

images (3)

சென்னையில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தைவான் நாட்டின் Foxconn  என்ற எலக்ட்ரானிக் பாகங்களை தயாரிக்கும் நிறுவனம் 2015 ஆண்டில் மூடப்பட்டது.  இந்த நிறுவனம் சென்னையில் உள்ள நோக்கியா கம்பெனிக்கு உதிரிபாகங்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிலும் தொடர்ந்து பல பொருட்களை தயாரித்து ஏற்றுமதி மற்றும் விநியோகம் செய்து வந்துள்ளது.

நோக்கியா ஆலை மூடிவிட்டதால் நிறுவனம் சரியாக செயல்பட முடியாமல் மூடி விட்டது.  இதில் வேலை செய்த பல ஊழியர்கள் வேலையிழந்தனர்.  இதனால் அவர்கள் போராட்டம் நடத்தினர். அந்நிறுவனம் கடந்த பத்து மாதங்களாக நிறுவனத்தில் எந்த வித தயாரிப்பும் செய்யாமல் விட்டுவிட்டது. இனிமேல் மீண்டும் தயாரிப்புகளை தொடர சரியான காரணங்களை அந்நிறுவனம் கூறவில்லை.

இப்போது இந்த நிறுவனம் மகாராஷ்டிராவில் தனது ஒரு யூனிட்டை அமைக்கப்போகின்றது. மேலும் தமிழகத்தில் மீண்டும் இந்த ஆலை துவங்க பரிந்துரை செய்துள்ளது தமிழக அரசு. இருந்தாலும் ஃபாக்ஸ்கான் எடுக்கும் முடிவுதான் இதில் வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தையோ துக்கத்தையோ தரும்.

Leave a Reply

Your email address will not be published.