கம்ப்யூட்டரில் தோன்றும் Blue Screen Error எதனால் தோன்றுகின்றது?

download (5)

கணினியில் நன்றாக வேலை செய்து கொண்டிருக்கையில் திடீரென்று நீல நிற திரை ஒன்று தோன்றி உடனே கம்ப்யுட்டர் ரீ ஸ்டார்ட் ஆகிவிடும்.  கணினியில் ரன் டைமில் தோன்றும் இந்த Error ஆனது தோன்றுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

1. பொருந்தாத கணினி பிராஸஸர்களால் இது உருவாகின்றது.  நாம் இயக்கும் OS  ஆனது பொருந்தாத பிராஸஸர்களின் மீது செயல்படும் போது சூடாகி ரீ ஸ்டார்ட் ஆகும்.

2. மதர் போர்டு போன்ற ஹார்டுவேர்களால் இந்தப்பிரச்சினைகள் தோன்றுகின்றது.  இந்த பிரச்சினை மதர்போர்டின் சர்க்கியூட்களில் எதாவது பிரச்சினைகள் தோன்றும் போது வருகின்றது.

3. Hard Disk ஆனது IDE ல் இருந்து AHCI  மோடுக்கு Bios செட்டிங்கில் மாற்றப்பட்டால் உடனே தோன்றும்.

4. புதியதாக இணைத்த ஹார்டுவேர்கள் மற்றும் பென்டிரைவ்கள், பிரின்டர்கள் போன்றவை நன்றாக செயல்படாவிட்டால் இந்த ஊதா நிற Error Screen தோன்றும்.

5. Blue Screen Error தோன்றுவதற்கும் நாம் புதிதாக இன்ஸ்டால் செய்த ஹார்டுவேர்களுக்கும் எதாவது பிரச்சினை இருந்தால் மட்டுமே இந்த மாதிரி தோன்றும்.

புளு ஸ்கிரீன் Error வந்தால் என்ன செய்யலாம்.

1. தற்போது இணைத்த பென்டிரைவர்கள் மற்றும் புதிதாக தற்போது இணைத்த ஹார்டுவேர்களை நீக்கிவிட வேண்டும்.

2. Bios Setting ல் உள்ள SATA OPERATION  ஐ மாற்றவேண்டும்.  IDE ல் இருந்து AHCI க்கு மாற்றவேண்டும்.

3. ரேம் மற்றும் ஹார்டு டிஸ்க்கினை கழட்டி அடுத்த கணினியில் போட்டு பார்க்கவும்.

மீண்டும் மீண்டும் தவறு வந்தால் தரவுகளை முடிந்தவரை காப்பாற்றிக்கொள்ளுங்கள் இந்த கணினி செயலிழக்கப் போகின்றது.

Leave a Reply

Your email address will not be published.