நல்ல கொழுப்பு உணவுகள்

hdl foods

கொழுப்புசத்து இருக்கும் உணவுகளை பார்த்தாலே பலரது நெஞ்சம் கதற ஆரம்பித்து விடும்.  ஏனென்றால் கொழுப்புச்சத்து உணவுகள் உடல் எடையை அதிகரிக்கச் செய்கின்றது.  உடல் எடை கூடும் பொழுது, இதயத்தில் ஆரம்பித்து சர்க்கரை நோய் வரை பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. என்ற பயம் எல்லோரிடமும் இருக்கிறது.  கொழுப்பு சத்தில் இரண்டு வகையுள்ளது.  ஒன்று எல்.டி.எல் ( L.D.L) மற்றொன்று எச்.டி.எல் (H.D.L.).  இதில் எல்.டி.எல் கொழுப்புதான் உடல் மற்றும் இதயத்திற்கு தீமையை விளைவிக்கும் பண்புடையதாகும்.  உடல் நலத்திற்கு உதவும் கொழுப்பு எச்.டி.எல். ஆகும்.  என்றாலும் அதிகப்படியாக சாப்பிடும் பொழுது இவ்விரண்டு கொழுப்புமே உடல் எடையை கூட்டக் கூடியது. என்பது குறிப்பிடத்தக்கது.  மற்றபடி. நீங்கள் தினந்தோறும் அளவாக சோ்த்துக் கொள்ள வேண்டிய நல்ல கொழுப்பு சத்துள்ள உணவுகளை இனி பார்ப்போம்.

உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புச்சத்துள்ள உணவுகள்.

நெய்

தொன்று தொட்டு நெய் உணவில் சோ்த்துக் கொள்ளும் உணவாக இருக்கிறது.  தினந்தோறும் சிறிதளவு நெய் உங்கள் உணவில் சோ்த்துக் கொள்ளுங்கள்.  உங்கள் உடலுக்கு நல்லது.  கடைகளில் பல நெய்கள் டால்டா கலந்து தயாரிக்கின்றனர்.  அப்படியில்லாமல் சுத்தமான நெய்யாக இருத்தல் அவசியம்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் கொழுப்பில் மற்றொரு நல்ல உணவுப் பொருளாக இருக்கிறது.  உடல் எடையைக் குறைக்கக் கூடிய ஒரு நல்ல மாற்று உணவு என்று சொல்லப்படுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோர் மற்ற எண்ணெய்கள் பயன்படுத்துவதைவிட ஆலிவ் எண்ணெய்யை உபயொகிக்கலாம்.

மீன்

மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமில சத்து இருக்கிறது.  இது உடலுக்கு அதிகமான நன்மை தரக் கூடியது.  இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல உணவு.  மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும மிகச் சிறந்த பயனுள்ள உணவு.,

 

 

Leave a Reply

Your email address will not be published.