காஷ்மீரில் பிரஷர் குக்கர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

images

காஷ்மீரில் பாலத்துக்கு அடியில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த குக்கர் வெடிகுண்டை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்து அகற்றினர். இதனால் தீவிரவாதிகள் சதி முறியடிக்கப்பட்டது.காஷ்மீரில் இன்று காலை ராணுவ வீரர்கள் பூஞ்ச் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலத்துக்கு அடியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் பாலத்துக்கு அடியில் சென்று பார்த்த போது பிரஷர் குக்கரில் சக்தி வாய்ந்த குண்டு சுமார் 5 கிலோ எடையுடன் வைக்கப்பட்டிருந்தது. அந்த குக்கரை திறந்தால் வெடித்து சிதறும் வகையில் அது உருவாக்கப்பட்டிருந்தது.

உடனடியாக இதை கண்டறிந்த நிபுணர்கள் அதை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்று செயல் இழக்க செய்தனர். அதிகமான போக்குவரத்து உள்ள பாலத்துக்கு கீழே தீவிரவாதிகள் வைத்திருந்த வெடிகுண்டு உரிய நேரத்தில் கண்டு பிடிக்கப்பட்டதால் மிகப் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் தீவிரவாதிகளின் சதி திட்டமும் முறியடிக்கப்பட்டுள்ளது. குக்கரில் வெடிகுண்டு பதுக்கப்பட்ட சம்பவம் காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.