ஆரம்பிச்சாச்சு தமிழகத் தேர்தல் திருவிழா

Nagercoil_1_States__497094f

தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது. தேர்தல் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2011ல் மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.

இதனை தொடர்ந்து கடந்த 2011ல் மே 23ம் தேதி சட்டசபை கூடியது. முதல் சட்டமன்ற கூட்டம் நடந்த மே 23ம் தேதியுடன் தற்போதைய ஆட்சி காலம் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்னதாக புதிய சட்டசபைக்கான தேர்தலை நடத்தி முடித்து, புதிய ஆட்சி அமைக்க வேண்டும். எனவே, தற்போது முதல் இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டியுள்ளது.

தமிழகம் உட்பட புதுச்சேரி, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. இதனால், தேர்தல் ஆணையத்தின் சார்பில் எப்போது தேர்தல் நடத்த வேண்டுமென்பது குறித்து மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் உள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. இதனை தொடர்ந்து வரும் ஜனவரி மாதத்தில் சென்னைக்கு தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் வருகின்றனர்.

இந்த குழுவினர் தமிழக தேர்தல் அதிகாரி, போலீஸ் அதிகாரிகள், அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அப்போது, தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்த வேண்டுமென்பது உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். இதனை தொடர்ந்து சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.