விஜயகாந்த் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் செயல்படுகிறார் : சொல்வது தேமுதிக எம்.எல்.ஏ

21-vijayakanth9-300

விஜயகாந்த் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் செயல்படுகிறார் என்று அதிமுக ஆதரவு தேமுதிக எம்.எ.ஏ சுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய விஜயகாந்திடம் 2016ல் அதிமுக ஆட்சி அமைக்குமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜயகாந்த் “2016ல் ஜெயலலிதா ஆட்சியை பிடிக்க முடியாது. இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள். இதே கேள்வியை உங்களால் ஜெயலலிதாவிடம் கேட்க முடியுமா? நீங்களெல்லாம் ஒரு பத்திரிக்கை காரர்களா.. த்தூ.. என்று காறி துப்பினார்.

இந்த செயலுக்கு பத்திரிக்கையாளர் அமைப்புகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தேமுதிக விலிருந்து அதிமுக விற்கு தாவிய எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் இதுபற்றி கூறியபோது “விஜயகாந்தின் செயல்பாடுகள் அவர் நல்ல மன நிலையில் தான் உள்ளாரா என, சந்தேகிக்க வைத்துள்ளது. எனவே, நல்ல மனநல நிபுணரை வைத்து தன் மன நிலையை சோதிக்க வேண்டும்.

விஜயகாந்த் மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. காரணம் அவர், தன் வீட்டில் மிருகங்களைத்தான் வளர்க்கிறார். அதனால், அவருக்கு அந்த குணம் ஏற்பட்டுவிட்டது என நினைக்கிறேன். ஊரையெல்லாம் திருடன் என பேசும் விஜயகாந்தின் ஒவ்வொரு நடத்தையும் எனக்குத் தெரியும். அவர் தொடர்ந்து இதே போல பேசிக் கொண்டிருந்தால், அவரின் கடந்த கால செயல்பாடுகள் அனைத்தையும் ஆதாரங்களுடன் விமர்சிக்க வேண்டியிருக்கும்.

இப்படிப்பட்ட மனிதரை, அரசியல் ரீதியில் வளர்த்து விட்ட பாவத்தை, எந்த காரியம் செய்து துடைப்பது என தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.