பழரசம் உடலுக்கு தீங்கானதா?

fruit juice

பழரசம் அருந்துவதால் என்ன தீமை இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா?  பழரசம் அருந்துவதைவிட, அதைக் குடிக்கும் முறையில் தான் அதிக தீமைகள் இருக்கின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.  ஏனென்றால் பெரும்பாலும் நாம் பழங்களை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக பழரசமாக குடிப்பதால் நார்ச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடுகிறது.  பழரசமாக சாப்பிடும் போது கூடுதலாக சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள், சர்க்கரை மற்றும் ஃப்ளேவர்கள் போன்றவை மேலும் உங்கள் உடல்நலத்தை பாதிக்கக் கூடியவை.  பழரசம் பருகுவது தவறு என்பதற்கு இது போன்ற சில காரணங்கள்தான் அடிப்படையாகின்றன.

பழரசம் உடலுக்குத் தீங்கானதா?

  1. ஃப்ளேவர்களின் அபாயம்

ஃப்ளேவர்களின் அடிப்படையில் விற்கப்படும் பானங்கள் அல்லது பழரசங்கள் உங்களது உடல் இயக்கத்தை சீர் குலைக்க காரணமாக அமைகிறது.  எனவே நீ்ங்கள் ஃப்ளேவர்களின் பெயரில் விற்பனையாகும் பழரசங்களை வாங்கி சாப்பிடுவதை முழுவதாக நீக்கிவிட்டு, பழங்களை அப்படியே சாப்பிடும் முறைக்கு மாறிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

  1. பழரசத்துடன் நீர் கலந்து பருகுவது

நீங்கள் கடைகளில் பழரசம் வாங்கி அருந்தும் பொழுது, தண்ணீரில் கலந்துதான் தருகிறார்கள்.  இதன் மூலம் உங்களுக்கு அந்த பழத்தின் சத்து மற்றும் அடைய வேண்டிய பலன்கள் கிடைக்காமலேயே போய்விடும் நிலை உருவாகிறது.

  1. சர்க்கரை

பழமாக சாப்பிடுவதால் அது செரிமானம் ஆக சிறிது நேரம் பிடிக்கிறது.  இதனால் சர்க்கரையில் அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை.  ஆனால் நீங்கள் பழரசமாக சாப்பிடும் போது, அது உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.  ஆஸ்துமா உள்ளவர்களும் கூட ஒமேகா 3 கொழுப்பு அமில சத்து இருக்கும் மீனை சாப்பிடலாம்.

  1. ஆளி விதைகள்.

ஒருக்கால் நீங்கள் அசைவ உணவு மற்றும் மீன் உணவை வெறுப்பவராக இருந்தால், அதற்கான சிறந்த மாற்று உணவு ஆளி விதைகள் தான்.  வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் வரை ஆளி விதைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டுவந்தால் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணமுடியும்.

  1. நட்ஸ்

உங்களுக்கு கொழுப்பு அதிகமாக இருந்தாலும் உங்கள் இதயத்திற்கு நன்மை பயக்கக்கூடிய உணவாக இருக்கிறது நட்ஸ்.  இதில் எல்.டி.எல் கொழுப்பு மிகவும் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம்.

  1. வேர்க்கடலை வெண்ணெய் (Peanut butter).

உடலுக்கு மிகவும் பயன்தரத்தக்கது வேர்கடலை வெண்ணெய்.  வேர்கடலையில் இருக்கும் எல்லா பயன்களும் இதில் இருக்கிறது.  ஜீனி சேர்க்கப்பட்டதை மட்டும் தவிர்க்கவும்.  ஒரு வேளை சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் வேலை செய்பவர்கள், கோதுமை ரொட்டியில் வேர்க்கடலை வெண்ணெய் சோ்த்து சாப்பிடலாம்.  உடல் நலத்திற்கும் நல்லது.  சமைக்கும் நேரமும் குறைவு.

  1. தேங்காய்.

இதய நலனுக்கு தேங்காய் அருமையானது என்று சொல்லப்படுகிறது.  தேங்காயில் இருக்கும் லாரிக் அசிட் (Lauric Acid) எச்.டி.எல். கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது.  இளசான தேங்காய்களை சமையலுக்கு உபயோகப்படுத்துவத மிகவும் நல்லது.

  1. முட்டை

ஒரு முட்டையில் சராசரியாக 1.5 கிராம் கொழுப்பு இருக்கிறது.  இதில் வைட்டமின் பி உள்ளது.  இது நரம்பு மண்டலம், மூளை மற்றும் இதயத்திற்கு நன்மை பயக்கக் கூடியது. காலை உணவுகளில் வேக வைத்த முட்டையை சோ்த்துக் கொள்வது உடல் நலத்திற்கு நல்லது.  உடல் பருமன் உள்ளவர்கள் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளை கருவை மட்டும் சாப்பிடலாம்.

ஊட்டச்சத்து நிறைந்த பழங்களை அப்படியே சாப்பிடுங்கள்.  பழரசமாக சாப்பிட்டால்  வைட்டமின், மினரல்ஸ், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் உட்பட பல சத்துக்கள் உடலுக்கு பயன்படாமலேயே போய்விடுகிறது.

கடைகளில் இருக்கும் பழரசங்கள் பாக்கெட்டுகளில் போட்டு விற்கப்படுகின்றன.  இப்படி அடைக்கப்பட்டு விற்பனையாகும் பழரசங்கள் உண்மையிலேயே ஃப்ளேவர் கலந்த இரசாயன நீர் தான்.  இதில் வேறு எந்த சத்துக்களும் கிடையாது.  ஆகவே பழங்களை வாங்கி அப்படியே சாப்பிடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.