கோவில் கட்ட இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்த உத்தர பிரதேச மாநில மந்திரி நீக்கம்

4c4680da-ca9f-4c1e-8dfb-0dfeef010804_S_secvpf

கோவில் கட்டுவதற்கு இஸ்லாமியர்கள் உதவவேண்டும் என்று அழைப்பு விடுத்த உத்தர பிரதேச மாநில மந்திரி நீக்கப்பட்டுள்ளார்.

அயோத்தியா, மதுரா மற்றும் காசியில் விட்டுக்கொடுத்து கோவில் கட்ட இஸ்லாமியர்கள் உதவிசெய்ய வேண்டும் என்று உ.பி. அமைச்சர் ஓம்பால் நெக்ரா அழைப்பு விடுத்தார். நேற்று மாலை பிஜ்னோரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அழைப்பினை விடுத்தார்.

நெக்ரா பேசுகையில், “அயோத்தியில் இல்லாமல் வேறுஎங்கு ராமர் கோவில் கட்டுவது? அயோத்தியில் ராமர் கோவில் கட்டவும், மதுராவில் கிருஷ்ணா கோவில் கட்டவும் இஸ்லாமியர்கள் உதவி செய்யவேண்டும், அங்குள்ள மசூதிகளில் கோரிக்கையை விடவேண்டும். உண்மையில் நான் சொல்கின்றேன், இஸ்லாமியர்கள் ராமர் கோவில் கட்ட கர சேவாவில் இணையவேண்டும்,” என்று கூறிஉள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவரை மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டு உள்ளார்.

இதற்கிடையே அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் திட்டத்துக்காக விசுவ இந்து பரிஷத் சேகரித்த கற்கள், சமீபத்தில் 2 லாரிகளில் அயோத்திக்கு வந்து சேர்ந்தன. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் நெக்ரா இவ்வாறு பேசியது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.