வந்தாச்சு மனதை கட்டுப்படுத்தும் கருவிகள்

mind-control-car2

சீனாவின் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே செல்கின்றது.  முதலில் ரோபோவைக்கொண்டு கார் ஓட்டினார்கள் இப்போது மனதைக்கொண்டு கார் ஓட்டுகின்றார்கள்.

இந்த நாள் வரைக்கும் Automatic Car, Semi-Automatic Car ஆகியவை கணினிகளின் கட்டளைகள் மூலம் இயக்கப்பட்டன.  ஆனால் தற்போது மனித மூளை மூலம் கட்டுப்படுத்தப்பட்டு காரானது இயக்கப்படுகின்றது.

மனித மூளையில் ஏற்படும் எலக்ட்ரோ அசைவுகளை ஒரு கருவி கண்டறிந்து அதை கட்டுப்படுத்தும் கருவியாக மாறி காரை இயக்குகின்றது.  இது EEG என்று அழைக்கப்படுகின்றது. மனிதர்கள் முன்னோக்கி செல்ல வேண்டும் என்றால் கார் முன்னோக்கி செல்கின்றது.  பின்னோக்கி செல்லவேண்டும் என்று நினைத்தால் பின்னோக்கி செல்கின்றது.  இவ்வாறு வாகனம் இயக்கப்படுகின்றது.

இது ஆச்சரியம் தரக்கூடிய வகையான கருவியாக இருந்தாலும் மனிதன் மூளை வேறு எதாவது நினைத்துவிட்டால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.  இதனால் பலத்த சோதனைகளுக்கு பின் தான் இந்த முறையில் கார்கள் தயாரித்து வெளிவிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published.