உஷார் பென்டிரைவில் வரும் பாம்கள் – The Killer USB

images

USB பென்டிரைவ்கள் வந்ததும் போதும் நம் தரவு தள உலகம் சுருங்கி சிறியதாகிவிட்டது எல்லாம் கைக்குள் அடங்கிவிட்டது.  அதே சமயம் USB பென்டிரைவ்களால் தான் அதிக வைரஸ்களும் பரவி கணினியை செயலிழக்கச் செய்கின்றது என்பது நிதர்சனமான உண்மை.    இதைக் கூட நாம் சமாளித்துவிடலாம்.  ஏதாவது XYZ ஆன்டி வைரஸ் ஸ்கேனரை போட்டு சரிசெய்துவிடலாம்.

ஆனால் இப்போது சில பென்டிரைவ்களை விசமிகள் தவறான காரியத்துக்கு பயன்படுத்துகின்றனர். இந்த பென்டிரைவ்களில் உள்ள டேட்டா சர்க்கியூட்களை மாற்றியமைத்துவிடுகின்றனர்.  இது கணினியில் இருந்து மின்சாரத்தை பெற்றுக்கொண்டு அதை அதிக மின்சாரமாக மாற்றி திரும்ப கணினிக்கே அனுப்புகின்றது.

KILLER-USB

இந்தஅதிக மின்சாரம் கணினியின் USB போர்ட்டின் வழியாக சென்று கணினியின் மதர்போர்டை செயலிழக்கச் செய்கின்றது.    இன்னும் சில பென்டிரைவ்கள் அதிக சத்தத்துடன் வெடித்துச் சிதறுகின்றது.  இதற்கு KILLER USB என்று பெயர்.

எங்கும் பென்டிரைவ்கள் கீழே கிடந்தால் எடுத்து உடனே என்ன இருக்கின்றது என்று பார்க்க USB போர்ட்டில் செருக வேண்டாம்.  அதை கழற்றி மற்ற பென்டிரைவ்களோடு ஒப்பிட்டு பார்த்தபின் சோதனை செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published.