கடவுச்சொற்கள் இல்லாமல் கூகுள் கணக்கை திறக்கலாம்

images

நாம் இப்போது பாஸ்வேர்டைக் கொண்டு கூகுள் மெயிலை ஒபன் செய்து மெயில்களை படிக்கின்றோம் இந்த மாதிரி செய்வது மிகுந்த பாதுகாப்பை வழங்கினாலும்.  தினமும் பயன்படுத்தும்போது தினமும் பாஸ்வேர்டினை ஞாபகம் வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் கொடுப்பது கடினமான செயல் ஆகும்.  இதனால் இந்த  சிக்கல்களைத் தவிர்பதற்காகவே கடவுச் சொல்லே இல்லாத கணக்கு திறக்கும் திட்டத்தினை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த முறையில் நாம் பயன்படுத்தும் Device ன் தகவலை கூகுளுக்கு அனுப்பிவிடலாம்.  பின் இந்த சாதனத்தைக் கொண்டு நாம் நம் கணக்கை பயன்படுத்திக் கொள்ளலாம்.  அந்த கணக்கில் நுழையும் பொதே எந்த சாதனத்திலிருந்து உள் நுழைகின்றீர்கள் என்று கேட்கும் அதற்கான பதிலை கொடுத்தோமானால் எளிதாக தினமும் இதைக்கொண்டு பயனர் கணக்கினை திறந்து கொள்ளலாம்.

உங்கள் தொலைபேசியில் கடவுச் சொல் இல்லாமல் அணுக உங்கள் கணிணியில் உங்கள் கூகுல் கணக்கை அணுகி அதில் உதாரணமாக நெக்சஸ் அலைபேசியைத் தேர்ந்தெடுத்து மின்னசலை அனுப்ப வேண்டும்.

பிறகு நீங்கள் கடவுச் சொல் இல்லா உள்நுழைவை அனுமதிக்க உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி கிடைக்கும். அதில் ஆம் பட்டனைத் தேர்வு செய்தால் அதன் பின் அடுத்த முறையிலிருந்து கடவுச் சொல் என்ற ஒன்று இல்லாமலே கூகுல் கணக்கை அணுகலாம். இது போன்றே இதற்கு முன் குரோம்புக்கில் தொலைபேசியின் ப்ளுடூத் உதவியுடன் நுழையும் ஸ்மார்ட் அன்லாக் அம்சத்தை கொண்டு வந்தது.

Leave a Reply

Your email address will not be published.