ஆளுநர் வரும் வரை ஆகாய விமானம் காத்திருக்காது – புது மொழி

download

கொச்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்வதற்காக வந்த கேரள ஆளுநர் பி. சதாசிவத்துக்காக காத்திராமல், ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் சதாசிவம் புகார் அளித்துள்ளார்.

தானும், தனது மனைவியும், கொச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில் ஏறுவதற்கான டிக்கெட்டை பெற்றிருந்த போதும், விமானம் நிற்காமல் சென்றுள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சதாசிவம் தனது புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற ஒரு சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநரின் வருகை குறித்து அறிவித்தும், உரிய நேரத்தில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது மிகப்பெரிய தவறு என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. பின்னணி: கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ஆளுநர் சதாசிவத்துக்காக காத்திருக்காமல் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோழிக்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, திருவனந்தபுரம் செல்வதற்காக கொச்சி விமான நிலையத்துக்கு சதாசிவம் தனது மனைவியுடன் செவ்வாய்க்கிழமை இரவு வந்தார். அப்போது அவரிடம், ஏர் இந்தியா விமானம் ஒன்று 11.40க்கு புறப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விமானத்தில் செல்ல சதாசிவம் ஆயத்தமானார். இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவன விமானியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் விமானத்தில் செல்வதற்கான சீட்டுடன் ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகளும் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, விமானத்தில் பயணிகள் ஏற்வதற்காக பொருத்தப்பட்டிருந்த ஏணி அகற்றப்பட்டு, விமானம் புறப்படுவதற்கு தயாராகி கொண்டிருந்தது. இருப்பினும், ஆளுநர் சதாசிவத்துக்காக காத்திருக்க முடியாது என்று தெரிவித்துவிட்டு, விமானத்தை விமானி ஓட்டிச் சென்று விட்டார். இதையடுத்து, கொச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு தங்கிவிட்டு, சாலை மார்க்கமாக திருவனந்தபுரத்துக்கு சதாசிவம் தனது மனைவியுடன் திரும்பினார். இந்த செய்தி விமான சேவை சரியாக நடக்கின்றது என்பதை தெரிவிக்கின்றதா இல்லை விமானியின் கவனக்குறைவா என்று தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published.