இளம்பெண்ணின் மீது ரயில் மோதி கை கால்கள் துண்டிப்பு

images

ஈரோடு, வெண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். மாநகராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சதீஷ்வரி. இவர்களது மகள் ஹரிப்ரியா (13) ஈரோட்டில் உள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

டிசம்பர் 21-ஆம் தேதி இரவு 8 மணி அளவில் ஹரிப்ரியா, வீட்டின் அருகே செல்லும் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அதில் வேகமாக வந்த ரயில், ஹரிப்ரியா மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஹரிப்ரியாவின் வலது கையும், இடது காலும் துண்டானது. அவரது பெற்றோர் ஹரிப்ரியாவை மீட்டு ஈரோடு மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் உயர் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில், மீண்டும் அவரை ஈரோடு அரசு மருத்துவமனையில் புதன்கிழமை சேர்த்தனர்.

சுயநினைவை இழந்த ஹரிப்ரியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, ஈரோடு ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.