தயிர் சாப்பிடுவதில் ஏற்படும் தவற்றலால் எடை கூடும்?!

curd

தயிர் உட்கொள்வதில் நீங்கள் செய்யும் இந்த தவறுகளால் உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும்!.

நொறுக்குத் தீனிகள், வறுத்த உணவுகள்ஈ ஃபாஸ்ட் புட், கொழுப்பு உணவுகள் என பலவகை காரணங்களால் உடல்எடை கூடும் என்று நீங்கள் படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள்.  ஆனால் நீங்கள் தினந்தோறும் உணவில் தயிரை சேர்த்துக் கொள்கின்றனர்.  தயிரை சாப்பிடும் முறையில் ஏற்படும் தவறினால் கூட உடல் எடை கூடும் என்று உங்களுக்குத் தெரியுமா? இரவு நேரத்தில் தயிரை சாப்பிடலாமா? கூடாதா?  பொதுவாகவே பால் உணவுகளில் நெய், வெண்ணெய் போன்றவைகளால் உடல் எடையை கூட்டும் தன்மையுடையவை.  இதில் தயிரும் அடங்கியுள்ளது என்று சொல்லப்படுகிறது.

 

கலோரிகள் பற்றி அறிந்து கொள்வது இப்பொழுது மிக மிக அவசியம்.  நவீன காலத்தில் உடலுக்கு வேலை கொடுத்து உழைப்பது குறைந்து வருகிறது.  முன்பு, நெற்றி வியர்வை பட உழைத்ததார்கள்.  அதனால் அதிகமாக சாப்பிட்டாலும் உடலில் கொழுப்பு தங்காது கரைந்து விடுகிறது.  ஆனால் இப்பொழுதோ ஒரே இடத்தில் மின்விசிறிக்குக் கீழே அமர்ந்து அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம்.  இதனால் கொஞ்சம் கூடுதலாக கலோரிகள் சேர்த்து சாப்பிட்டால் கூட உடல் எடையில் எக்க சக்கமாக மாற்நம் ஏற்பட்டு விடுகிறது.  100 கலோரிகளும் 6 கிராம் புரதமும் ஒரு பாக்கெட் தயிரில் உள்ளது.  மத்தியான சாப்பாட்டுக்கு 200-350 கலோரிகள்தான் தேவை.  இதில் மொத்தமாக நீங்கள் தயிரை சேர்த்துக் கொள்வது உடல் எடையை கூட்டச் செய்து விடுகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து உண்ண பழகுங்கள்.  மத்தியான சாப்பாட்டில் சிலர் சாம்பார், பொரியல், தயிர், ரசம் என அனைத்தையும் சேர்த்து சாப்பிடுவார்கள்.  இதில் தப்பொன்றும் இல்லை.  எல்லாச் சத்துக்களும் கிடைக்கும்.  என்றாலும், ஒரே சமயத்தில் ஒட்டு மொத்தமாய் சாப்பிடுவது உங்கள் உடல் எடையை கூட்டத்தான் செய்யும்.  எனவே சாம்பார், ரசம் மதியம் சாப்பிட்டு விட்டு மாலை நேரத்தில் தயிரை சாப்பிடலாம்.  நீரில் கலந்து மோராக குடிக்கலாம்.  இது உங்கள் உடலுக்கு நல்லது.

மற்ற உணவுகளோடு தயிரையும் சோ்த்து சிலர் சாப்பிடுகிறார்கள்.  தயிரை மட்டும் பயன்படுத்தாமல் அதில் நுட்ஸ், பாதாம், பழங்கள் போன்ற மற்ற உணவுகளையும் சேர்த்து சுவையாக சாப்பிடும் பழக்கம் சிலர் கொண்டிருப்பார்கள்.  இது போல உண்ணும் பொழுது நாள் முழுக்க நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய கலோரிகளை ஒரே சமயத்தில் உடலில் சேருகிறது.  இதனால் உடல் எடை அதிகரிப்பையும் செரிமான சிக்கல்களையும் தான் ஏற்படுத்துகிறது.

கொழுப்பு நீக்கப்பட்ட தயிர், ப்ளேவர்கள் சேர்க்கப்பட்ட தயிர் என பல வகைகளில் தயிர்கள் கிடைக்கின்றன.  சுவைக்காக இனிப்பூட்டிக்கள் மற்றும் ப்ளேவர்களை சேர்க்கின்றர்.  இப்படி சேர்ப்பதானது இவர்கள் கொழுப்பை நீக்கியதை விட உடலுக்கு தீங்கானது.

தயிர் புரோபயாடிக்ஸ் அதிகமுள்ள உணவாகும்.  பல்வேறு ஆய்வுகளில் மிகவும் நல்லது என்று கூறப்பட்டிருக்கிறது.  இது பசியை தீர்க்கும் பண்புடையது.  பசியாக இருப்பவர்கள் தயிர் சாப்பிட்டால் பசி அடங்கிவிடும்.  இதனால் தயிர் அதிகம் சாப்பிடுபவர்களும், தயிரையே டயட்டாக சாப்பிடுபவர்களும் இருக்கின்றனர்.  இது கூடும் பொழுது, உடல் எடையும் கூடும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

ஃபாஸ்ட்புட்களோடு தயிரும் கலந்து சில உணவு வகைகளை விற்கின்றனர் வட இந்தியர்கள்.  அதை தாஹி (Dahi-தயிர்) என்று பெயர் சேர்த்து விற்பார்கள்.  எப்போதுமே நொறுக்குத் தீனிகள் மற்றும் ஃபாஸ்ட்புட் உடல் எடை கூட்டச் செய்யும் உணவுகள்.  இவற்றோடு தயிர் சேர்த்து சாப்பிடும் பொழுது உடல் எடை ரொம்பவும் அதிகரிக்கச் செய்யும் வாய்ப்புக்கள் உண்டு.

Leave a Reply

Your email address will not be published.