மது ஒரு போதைப் பொருள் அல்ல அமைச்சர் பேச்சால் சர்ச்சை

images

மது போதைப் பொருள் அல்ல என்று பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுர்ஜித் குமார் ஜயனி (Surjit Kumar Jyani) தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகரில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மையத்தைத் திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுர்ஜித் குமார் ஜயனி இவ்வாறு கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஒருபுறம் மறுவாழ்வு மையங்களைத் திறப்பதும், மற்றொருபுறம், மது போதைப் பொருள் அல்ல என்று கூறுவதுமான இரட்டை நிலைப்பாட்டை அரசு கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவரான சுனில் ஜக்கார் விமர்சித்துள்ளார்.

மாநில சுகாதாரத்துறை அமைச்சரின் கருத்து, ஷிரோமணி அகாலி தளம் – பாரதிய ஜனதா கூட்டணி அரசின் மனநிலையை பிரதிபளிக்கக்கூடிய வகையில் உள்ளதாக ஆம் ஆத்மி தலைவர் சுச்சா சிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.