வாலிபரின் தொண்டையில் சிக்கிய மொபைல் போன்கள்

download

செல்போன்கள் வந்ததாலும் வந்தது அதனால் ஏற்படும் பயன்களுக்கு தகுந்தவாறு தொந்தரவுகளும் உள்ளன. விபத்துகள் ஏற்படுவது மற்றும் உடல் உபாதைகளுக்கும் இந்த செல்போன்கள் வழிவகுக்கின்றன.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வாலிபருக்கு நேர்ந்த அனுபவமோ வித்தியாசமானது

வயிற்றை கலக்கும் ஒரு விடியோ ஒன்று இனையதலங்களில் வெளியாககி உள்ளது.தென் ஆப்பிரிக்காவில் வாலிபர் ஒருவரின் தொண்டையில் சிக்கி கொண்ட மொபைல் போனை டாக்டர்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையில் அகற்றினர். இந்த காட்சி வீடியோவாக எடுக்கபட்டு இணையதளங்களில் வெளியாகி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள கிளர்க்ஸ்ட்ராப் மருத்டுவமனையில் இந்த வீடியோ எடுக்கபட்டு உள்ளது.

முதலில் வாலிபரின் நாக்கில் பசை ஒன்று தடவப்படுகிறது பின்னர் இரும்பினாலான இடுக்கியை கொண்டு வாலிபரின் தொண்டையில் டாக்டர்கள் நுழைக்கிறார்கள். பின்னர் மெதுவாக மேலே எடுக்கிரார்கள் அப்போது ஒரு மொபைல் பொன் ஒன்று வெளியேறுகிறது.இதை பார்த்து டாகடர்கள் குழு அதிர்ச்சி அடைகிறது. இந்த வீடியோ உண்மையாக 2012 -ல் எடுக்கபட்டு உள்ளது. இதை எடுததவர் எட்வின் ஷின்கோ இந்த வீடியோ கடந்த ஒருவாரமாக அனைவராலும் பார்க்கபட்டு வருகிறது.

ஸ்மார்ட் போன் வாலிபரின் தொண்டையில் சிக்கி கொண்டதற்கான தெளிவான காரணம் தெரியவில்லை. வாயில் செல்போனுடன் பயன் என தலைபிட்டு உள்ளனர்.ஆனால் மொபைல் போனை விழுங்கி அவதிப்பட்டவரின் பெயர் எதுவும் தெரியவில்லை.

இது போல் 2005 இல் மிசவுரியை சேர்ந்த ஒருவர் தனது காதலியுடனான சண்டையில் மொபைல் போனை காதலியின் வாயில் திணித்து விட்டார். அது தொண்டைக்குள் சென்று விட்டது பின்னர் இந்த குற்றத்திற்காக வாலிபர் கைது செய்யபட்டார் எனபது குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published.