மொபைல் போன் வெடிக்காமலிருக்க வழிகள்

download

தற்போது ஸ்மார்ட் போன்கள் பரவிய வண்ணம் இருக்கின்றன.  இந்த ஸ்மார்ட் போன்கள்  கையில் இருப்பதைவிட சார்ஜில் இருப்பது தான் அதிகம்.  புதிதாக வாங்கி மூன்று மாதங்கள் கூட ஆவதில்லை உடனே மொபைல் போன்களின் பேட்டரி செயலிழக்க ஆரம்பித்துவிடுகின்றது.  இதன் காரணம் மொபைல் போன்களின் உபயோகம் தான்.  சார்ஜிங் செய்து கொண்டே கேம் விளையாடுவது மற்றும் பாட்டுக் கேட்பது போன்றவைகளை செய்யக் கூடாது. இரவு முழுக்க சார்ஜிங் ஆகவேண்டும்.

மேலும் அனைத்து போன்களையும் ஒரே இணைப்பின் மூலம் சார்ஜிங் செய்யப்படுகின்றது. இந்த முறையில் சார்ஜ் செய்யப்படுவதால் அதற்கென்று தனிப்பட்ட சார்ஜர் தேவையில்லை  இதனால் எங்கெல்லாம் USB Ports கள் கிடைகின்றதோ அங்கெல்லாம் செருகி சார்ஜிங்கை பெற்றுக்கொள்கின்றனர்.

இந்த USB Port ஆனது குறைந்த அளவு  (+5v) மின்சாரத்தை வெளிவிட்டுக்கொண்டிருக்கும்.  லேப்டாப் மற்றும் கணினிகளில் இந்த போர்ட்கள் இருக்கும் இதில் கனெக்ட் செய்து சார்ஜிங் செய்து கொள்கின்றனர்.  சில கணினிகளில் மட்டுமின்றி USB Player களின் வழியேயும் கரென்டைப் பெற்று சார்ஜிங் செய்து கொள்கின்றனர்.  இப்போது அதிக வோல்டேஜ் திடிரென்று வந்தால் நமது ஸ்மார்ட் போன்கள் வெடித்துவிடுகின்றன.

மேலும் USB Port வழியே சார்ஜிங் செய்யும்போது பேட்டரி ஃபுல் ஆனாலும் சார்ஜ் ஏறிக்கொண்டே இருக்கும் இதனால் பேட்டரி சூடேறி வெடித்துவிடும்.  இதனால் ஸ்மார்ட் போன்களை அதற்கான கம்பெனி சார்ஜரில் மட்டும் தான் சார்ஜ் ஏற்றவேண்டும்.  இதில் வோல்ட்டேஜ் அதிகமானால் கூட பிரேக்கிங் சர்கியூட்கள் செயல்பட்டு போனை வெடிப்பதில் இருந்து காப்பாற்றிவிடும்.

முறையாக எர்திங் செய்யப்படாத கணினிகள் சிலவற்றை தொட்டாலே Shock  அடிக்கும் அல்லது சுறு சுறு என்று இழுக்கும் இந்த வகை கணினிகளில் அரவே சார்ஜ் போடக்கூடாது.  USB port களின் வழியே 5V ஆனது வருகின்றதா அல்லது அதிகமாக வருகின்றதா என்று மல்டிமீட்டர் உதவியுடன் செக் செய்து கொள்ளவும்.

இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்க  ஒரிஜினல் போன் சார்ஜரில் மட்டும் சார்ஜ் ஏற்றுங்கள் பயணத்தின் போது Travel Charger Battery Bank னை உபயோகப்படுத்துங்கள்.  விலையுயர்ந்த ஸ்மார்ட் போன்களை வெறும் 60 ருபாய் USB Cable ஆல் இழந்துவிடாதீர்கள்.  வெடித்துச் சிதறினால் உயிருக்கே ஆபத்து.

Leave a Reply

Your email address will not be published.