டச் ஸ்கிரீனை துடைக்க வேண்டுமா

download

வீட்டிலும் சரி கையிலும் சரி அலுவலகங்களிலும் சரி இப்போது எல்லாமே டச் தான்.  தொடு திரையில் அழுக்கு படிந்தால் அழுக்கேறி பிரச்சினை செய்து விடும்.  இந்த பிரச்சினைகளை நீக்க நாம் டச் ஸ்கிரீனை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.  இதற்கு துடைப்பதற்கு என்று தனிநேரம் ஒதுக்கமுடியாமல் போகிற போக்கில் பேசிவிட்டு உடனே சட்டை அல்லது பேன்ட்டின் மீது தேய்த்து (?) விட்டு துடைத்துவிட்டோம் என்று பாக்கெட்டில் போட்டு விடுகின்றனர்.

ஆனால் டச் ஸ்கிரீனை சரியாக துடைக்க வேண்டும்.  இதற்கென்று தனியான மைக்ரோ பைபர் துணிகள் உள்ளது.  இது ஸ்கிரீனை ஸ்கிராட்சஸ் செய்யாது.  சரி விடுங்கள் பனியன் துணிகள் பருத்தியிழையால் ஆனது அவற்றையும் பயன்படுத்தலாம்.

முதலில் சற்று ஈரப்பதமான பனியன் துணிக்கொண்டு ( பருத்தி துணி ) சுத்தமாக துடைத்துவிட வேண்டும்.  பின் மைக்ரோ பைபர் துணி மூலம் மென்மையாக  துடைக்க வேண்டும்.  ஸ்பீக்கர் மற்றும் மைக் துளைகள், சார்ஜிங், ஹெட்போன் துளைகளில் காற்றை உள்ளிழுக்கும் கருவி( vaccuam Cleaner ) அல்லது சிரஞ்சின் மூலம் இழுத்து தூசை நீக்கவேண்டும்.

கெமிக்கல் கிளீனர்களான டெட்டால், கொலின் போன்றவைகளை உபயோகிக்க வேண்டாம் இதனால் பாதிப்பு தான் வரும்.  தினமும் சிறிது நேரம் ஒதுக்கி நமது ஸ்கிரீன்களை சுத்தம் செய்தால் வெகு நாட்கள் ஸ்கிரீன் கெட்டுப்போகாமல் நன்றாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.